Gold: `நெருங்கும் பண்டிகைகள்; 4 நாள்களாக மாறாமல் இருக்கும் தங்கம் விலை..!’ – எவ்வளவு தெரியுமா?

இன்றிலிருந்து இரண்டாவது நாள் விநாயகர் சதுர்த்தி… அடுத்து ஆயுதப்பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. பண்டிகை காலத்தையொட்டி ‘தங்கம் விலை ஏறுமா? இறங்குமா?’ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில், இந்த வார திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தங்கம் விலை மாறாமல் அப்படியே தொடர்ந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,695 ஆகவும், பவுனுக்கு ரூ.53,560 ஆகவும் விற்பனை ஆனது. அதன் பின்னர், இந்த திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,670 ஆகவும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,360-க்கும் விற்பனை ஆனது. இதே விலை இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.

Gold: ஏறுமா…ஏறாதா?!

கடந்த திங்கட்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.91-க்கு விற்பனை ஆனது. இரண்டு நாள்களாக இதே விலையில் தொடர்ந்த வெள்ளி விலை நேற்று ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.90 ஆக விற்பனை ஆனது. இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது.

நாளையும், அடுத்த நாளும் இதே விலை தான் தொடரும் என்று கூறமுடியாது. சந்தையிலோ, உலக அளவிலோ எதாவது மாற்றம் நிகழ்ந்தால் தங்கம் விலை ஏறலாம் அல்லது குறையலாம். அதனால் தங்கம் விலை குறையும்…ஏறும் என்று எதையும் தீர்மானமாக கூற முடியாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,540-க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.44,320-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.