ஆறு தள்ளுவண்டிகள், ஒன்பது மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று வேலையாட்களோடு தொடங்கப்பட்ட இந்தியாவின் முக்கியமான டெய்ரி நிறுவனமான ஆரோக்கியா பால், ஹெட்சன், அருண் ஐஸ்கிரிம் நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் சந்திரமோகன் நம்மிடம் அவருடைய தொழில் அனுபவங்களை பற்றி விரிவாக பேசினார்… அப்போது அவர்,
”நான் 21 வயசுல இந்த தொழிலை ஆரம்பிச்சேன். இந்த தொழிலுக்குள்ள வரும்போது நம்ம தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டோம், நம்ம லைஃப் ல எதிர்காலமே இல்லை ங்கிற விரக்தி தான் முதல்ல வந்தது . இந்த தொழிலை என்ன மாதிரியே ஒரு நாற்பதாயிரம் பேர் கை வண்டி தள்ளி ஐஸ்கிரீம் வித்துட்டு இருந்தாங்க. ஆனால் எனக்கு எதுவா இருந்தாலும் நம்ம தான் முதன்மை ஸ்தானத்துக்கு வரணும்ங்கிற வெறி இருந்தது. நம்ம தொடர்ந்து இந்த துறைல இருந்தா நஷ்டப்படுவோம்ன்னு தெரிஞ்சதுக்கு அப்றோம், பெரிய நிறுவனங்கள் செய்ற வேலைகளை நம்ம செய்யனும். அவங்களோடத்தான் தான் நம்ம போட்டியா இருக்கணுமே தவிர, இந்த நாற்பதாயிரம் பேர்ல இருந்து வெளிய வரணும்னு எண்ணம் வந்ததுனால வெளிய வந்துட்டேன்.
எனக்கு தெரிஞ்சி அந்த நாற்பதாயிரம் பேர்ல இருந்து வெளிய வந்த ஒரே ஆள் நான் தான். பெரிய கம்பெனிகளோட போட்டி போடும்போது நமக்கு பெரிய பிராண்டு இல்லாததனால் அவங்க நம்ம கம்பெனியை வாங்கல. ஒவ்வொரு கம்பெனிக்கும் போகும்போது வெளிய வெரட்டி விடுவாங்க. உட்காரதுக்கு சேர் கூட குடுக்க மாட்டாங்க. அதுக்கு அப்றோம் தான் கல்லூரிகளுக்கு போய் கொடுக்க ஆரம்பிச்சோம். அப்படிதான் எங்க தொழில் வளர ஆரம்பிச்சது.” என்றார்.
இவ்வாறு தனது வாழ்க்கையிலிருந்து பல சுவாரசியங்களை தொழிலதிபர் சந்திரமோகன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். நீங்களும் கேளுங்கள். உத்வேகம் அளிக்கும் கதை அவருடையது..!