`எதிரிகள் அதிகம்; எம்.பி தேர்தல் போன்று சுமூகமான சூழ்நிலை வராது’ – கே.என்.நேரு ஓப்பன் டாக்

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு,

“எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நாம் கடுமையாக வேலை செய்ய வேண்டும். அப்படிதான் வேலை செய்யப் போகிறோம். இப்போது எப்படி இருக்கிறது என்று சொன்னால், ஒருபக்கம் சீமான் நம்மை குறை சொல்கிறார். ஒருபக்கம் புதுசா வந்தவர், வரப்போகிறவர் குறை சொல்கிறார். ஒருபக்கம் பார்த்தீர்கள் என்றால் அ.தி.மு.க, ‘அடுத்து நாங்கதான்’ என்று சொல்கிறார்கள். எவ்வளவோ நன்மைகள் செய்தாலும், பா.ம.க நம்மை குறை சொல்கிறார்கள். பா.ஜ.க ஏற்கனவே எதிரியாக இருக்கிறார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

எதிரிகள் அதிகமான காலம். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, சட்டமன்ற தேர்தலில் வருமா என்று சொன்னால், நிச்சயமாக அதுபோல் சுமூகமான சூழ்நிலை வராது என்பது எங்களுடைய கருத்து. பலபேருடைய கருத்தும் அதுதான். எனவே, ஒவ்வொரு தலைவர்களும், ஒவ்வொரு செயலாளர் பெருமக்களும் உழைக்க வேண்டும். ஓ.பி.எஸ் சட்டமன்றத்தில் பேசினார், ’38 ஆண்டுகள் கழித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். அதற்கு வாழ்த்துகள்’ என்று. அதுபோல் இந்த கழகம் இரண்டாவது ஆட்சி என்பது 69, 71 – க்கு பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக தளபதி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றால், அதற்கு லால்குடி உறுதுணையாக இருந்தது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY