Tamil News Live Today: ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்!

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் உரையாடினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின், “ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு சென்றிருந்தேன். பல்வேறு வாய்ப்புகள் மற்றும் உற்சாகமான கூட்டாண்மைகள் பற்றி இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்றத் தீர்மானித்துள்ளோம்!” என்றிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள்..!

இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் வழக்கமான சேவையை தொடங்கும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் முதல் மைசூர், சென்னை சென்ட்ரல் முதல் கோவை, சென்னை சென்ட்ரல் முதல் விஜயவாடா, சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி, கோவை முதல் பெங்களூர் என மொத்தம் ஐந்து வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டுல் உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் புதிதாக மதுரை பெங்களூரு மற்றும் சென்னை எழும்பூர் நாகர்கோயில் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் – நாகர்கோவில் ரயிலை பொருத்தவரை காலை 5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும். பெங்களூரு மதுரை ரயில் பொருத்தவரை காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும்.

சென்னையில் இன்று ஃபார்முலா 4 கார் பந்தயம்!

சென்னையில் இன்றும் நாளையும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

 தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88