கோவை மாவட்டம் – பொள்ளாச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி தன் உறவினரை வழியனுப்பி வைக்க கோவை விமானநிலையம் சென்றிருக்கிறார். பிறகு அவர் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் ஊருக்கு திருப்பிக் கொண்டிருந்தார்.
அவரின் கார் தாமரைக்குளம் பகுதி அருகே செல்லும்போது, திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பழனிச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனிச்சாமியின் வாகனம் மட்டுமல்லாமல், அவர் பின்னால் வந்த மேலும் 3 இருசக்கர வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கினர்.
இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் குமார் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், 4 இருசக்கர வாகனங்களும் தவறான வழியில் (ராங் வே) வந்துள்ளனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காரில் ஏர்பேக் இருந்ததால், லேசான காயங்களுடன் தப்பித்துவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88