மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கனமழை மற்றும் சூறாவளி காரணமாக இந்த சிலை சரிந்து விழுந்தது. நிறுவிய 8 மாதத்திலேயே சிலை விழுந்ததால் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் அரசைக் கடுமையாக விமர்சித்தனர்.
ஏற்கெனவே சிலை விழுந்ததற்காக, “சத்ரபதி சிவாஜியின் பாதத்தில் 100 முறை விழுந்து மன்னிப்புக் கேட்கத் தயார்” என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.
மேலும் மாநில அரசு, கடற்படைதான் சிலையை நிறுவியது என விளக்கமளித்துள்ளது. சிலை உடைந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்த கட்டட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீஸர் கைது செய்துள்ளனர். சிற்பி ஜெயதீப் ஆப்தே தலைமறைவாகியிருக்கிறார்.
இந்த நிலையில் சிலை உடைந்தது தொடர்பாக முதல்முறையாகப் பேசியுள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவின் பால்கர் என்ற பகுதியில் பேசிய பிரதமர், “சத்ரபதி சிவாஜி மகாராஜா வெறும் பெயர் அல்ல, என் கடவுள் சிவாஜி மகாராஜாவிடம் இன்று தலை வணங்கி மன்னிப்புக் கேட்கிறேன். சிவாஜியை தங்கள் அடையாளமாகக் கருதுபவர்களிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
மன்னிப்புக் கேட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். “இந்த மண்ணின் மகன் வீர் சாவர்க்கரை அவமதித்து, அவமானப்படுத்துபவர்கள் அல்ல நாங்கள். அவர்கள் (காங்கிரஸ்) மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லை. நீதிமன்றத்துக்குச் சென்று வாதிடவே தயாராக இருக்கிறார்கள்” எனப் பேசியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88