இந்திய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை முந்திய அதானி… டாப் 10 கோடீஸ்வரர்கள் யார்?

நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்பதில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி இடையே அடிக்கடி போட்டி இருந்து கொண்டே இருக்கிறது. கெளதம் அதானி நிறுவனத்தின் முதலீடு குறித்து அடிக்கடி வெளிநாட்டு மீடியாக்கள் வெளியிடும் தகவல்களால் பங்குகள் சில நேரம் கீழ் நோக்கிச் செல்கிறது. எனவே நாட்டின் பணக்காரர் என்ற பெயருடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்தார். அதானியின் சொத்து மதிப்பில் அடிக்கடி ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்திய பணக்காரர்கள் பற்றிய விபரத்தை ஹுருன் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் அனாஸ் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதில் கெளதம் அதானி 11.6 லட்சம் கோடியுடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயருடன் முதலிடத்தில் இருக்கிறார்.

அதானி நிறுவனம் மின் உற்பத்தி, மின் விநியோகம் துறைமுகங்கள், விமான நிலையங்களை இயக்கி வருகிறது. அதானி இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தார். கடந்த ஒரு ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு 90 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஹிண்டர்பர்க் அறிக்கையால் சரிவைச் சந்தித்த அதானி நிறுவனம் அதன் பிறகு படிப்படியாக வளரத்தொடங்கியது. கடுமையான சவால்களுக்கு மத்தியில் அதானி துறைமுகம் பங்குகள் ஒரு ஆண்டில் 98 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதானி பவர் பங்குகள் 76 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முன்பு முதலிடத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இருந்தார். தற்போது முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

முகேஷ் அம்பானி 10.14 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜூலை 31-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த சொத்து விபரம் வெளியிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த ஒரு ஆண்டில் 25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. முகேஷ் அம்பானி எரிபொருள், பெட்ரோகெமிக்கல், சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு பிரிவில் முன்னணியில் இருக்கிறார். இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஆனால் சீன கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கைவாலியா வோரா (21) என்பவர் இளம்பணக்காரர் என்ற பெயருடன் முதலிடத்தில் இருக்கிறார். முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் பெயரும் இந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது. பாலிவுட்டை சேர்ந்தவர் 40500 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்.சி.எல். நிறுவனர் சிவ்நாடார் 3.14 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து வெளியிட்ட சைரஸ் பூனாவாலா நான்காவது இடத்தில் இருக்கிறார்.

சன் ஃபார்மா இண்டஸ்ட்ரீஸின் திலீப் சாங்வி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்

குமாரமங்கலம் பிர்லா 2.35 லட்சம் கோடியுடன் 6-வது பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். பிர்லா நிறுவன சொத்து கடந்த ஒரு ஆண்டில் 87 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

பஜாஜ் குடும்பம் 10-வது இடத்திலும்,

ஆசிம் பிரேம்ஜி குடும்பம் 9-வது இடத்திலும் இருக்கிறது.

கடந்த 5 ஆண்டில் இந்தியாவின் பெரிய பத்து பணக்காரர்கள் பட்டியலில் 6 பேர் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர்.

டிமார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானியா 1.90 லட்சம் கோடியுடன் 8-வது பெரிய பணக்காரர் என்ற இடத்தில் இருக்கிறார்.