2024 செப்டம்பர் 22-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி நாளில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
தன்னை சரணடைந்த பக்தர்களுக்கு ஒருபொழுதும் தீவினை அண்டாமல் காக்கும் வீர தேவதை வராஹி அம்மன். கன்னிமார்கள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னி வராஹி. வராஹியின் ரூபங்களில் சாந்த சொரூபமும் உண்டு, உக்ர சொரூபமும் உண்டு. இவளை வழிபடும் பக்தர்களுக்குப் பூஜையில் சாந்த ரூபம் கொண்ட புன்சிரிப்போடு திகழ்கிறாள் வராஹி.
வராஹியின் பக்தர்களைத் தீவினைகள் அச்சுறுத்தும்போது கோபத்தால் உக்ர நிலையை அடைகிறாள். அதேசமயம் பக்தர்களைக் காக்க கருணை கொண்ட அன்னையாகவும் திகழ்கிறாள். ஆதி பராசக்தி வடிவங்களில் மிக உயர்ந்த வடிவம் வராஹி. தோல்விகளை விரட்டி வெற்றி கொடுக்கும் வடிவம் வராஹி. சகல லோகங்களையும் காக்கும் காவல் படைத்தலைவி வராஹி. வராஹி உபாசனை அல்லது வராஹி வழிபாடு செய்பவர்களுக்கு எந்த தீவினைகளை அண்டாதவாறு காப்பவளும் இந்த அன்னையே.
மிருக பலமும் தெய்வ சக்தியும் கொண்டவள் வராஹி, பக்தர்களின் துன்பங்களைத் தாங்கி ஆபத்திலிருந்து காப்பவள். அபயம் என வந்தவர்களின் எதிரிகளைப் பொடிப்பொடியாக்கும் பைரவியின் அம்சமும் வராஹியே. வராஹியை வணங்குபவர்களுக்கு முன்கூட்டியே நடக்கப்போகும் நிகழ்வுகளைக் கனவிலோ, எண்ணத்திலோ தோன்றி எச்சரிப்பாள் என்பதும் நம்பிக்கை. எனவே தேய்பிறை பஞ்சமியில் வராஹியை வழிபட சகல நன்மைகளும் உருவாகும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வராஹி அம்மனை கட்டாயம் வழிபட வேண்டும் என்கின்றன ஜோதிட நூல்கள். அதே போல மகரம், கும்பம் ராசிகளைச் சேர்ந்தவர்களும் வராஹியை வழிபட துன்பங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.
ஏழரை சனி, கண்ட சனி, பாத சனி எனச் சனியின் எந்தத் தொல்லைகளை அனுபவிப்பவர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் பஞ்சமி நாள்களில் வராஹி அம்மனை வழிபடலாம். இந்நாள்களில் தீபமேற்றி வழிபட்டால், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து மீளலாம். இது தவிர வராஹி அம்மனை வழிபட பெளர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிபட சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிலும் தேய்பிறை பஞ்சமி திதியன்று வராஹியை மனமுருக அழைத்து வேண்டினால் வராஹி அம்மன் வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.
சிம்ம வராஹி, மகிஷ வராஹி, புலி வாகன வராஹி, வெண் குதிரை வராஹி எனப் பல ரூபங்களில் இந்த அன்னை விளங்குகிறாள். இதைப் போலவே தாராபுரம் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மனும் மிக விசேஷமானவள். இவள் தன்னிடம் வேண்டுபவர்களுக்குப் பிரத்யட்சமாக கனவில் தோன்றி பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்பவள் என்கிறார்கள் பக்தர்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
கருணை வடிவமான இந்த தேவிக்கு இங்கு செவ்வாய், ஞாயிறு ராகு கால பூஜைகள் விசேஷம். இந்த ஆலயத்தில் காலை கணபதி ஹோமம், புஷ்பாஞ்சலி, ஆரத்தி போன்றவைச் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குள்ள பாலகணபதி பால திரிபுர சுந்தரி, உன்மத்த பைரவர், காமாக்யா தேவி வடிவங்களும் சிறப்பானவை. வளர்பிறை பஞ்சமி அன்று காலை வராஹி தேவிக்குச் சிறப்புப் பூஜைகளும், தேய்பிறை பஞ்சமி நாளில் இரவு ஹோம வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
காமாக்யா தேவிக்கு இங்கு குருதி பூஜை நடைபெறுகின்றது. இங்குள்ள 20 அடி உயர திரிசூலம் அச்சத்தை நீக்குவது. சக்தி விகடன் வாசகர்கள் நலமும் வளமும் பெற 2024 செப்டம்பர் 22-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி நாளில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்ரீசக்ர வராஹியாக அன்னை இங்கே வீற்றிருந்து பல்வேறு சித்துக்களைச் செய்து பக்தர்களைக் காத்து வருகிறாள். எனவே இங்கு ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தீராத கடன்கள் தீரும்; வாட்டும் வியாதிகள் நீங்கும்; மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.
சகல நன்மைகளையும் அருளும் இந்த ஸ்ரீவராஹி ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். யம பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். வீண் அச்சங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். திருமண தடை உத்தியோகத் தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும்(தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
QR CODE FOR SRIVARAHI HOMAM REGISTRATION:
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07