“பாஜக என்பது வீடியோ கட்சி; அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி..!” – டாக்டர் சரவணன் காட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியதற்கு தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து பேசியும், உருவபொம்மை எரித்தும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

டாக்டர் சரவணன்

இந்த நிலையில் அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார், 51 ஆண்டுகளை கடந்து  ஆலமரம் போல அதிமுக செயல்படுகிறது. தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்து சாமானிய மக்களுக்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

டாக்டர் சரவணன்

தமிழகத்தில் அதிமுக, திமுக-வுக்கு மட்டுமே இடம் உள்ளது, பாஜக, மழை பெய்த உடன் முளைக்கும் காளான் போன்றது, பாஜக என்பது வீடியோ கட்சி, அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி, அதிமுக கூட்டணியில் இருக்கும்போது எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை பாராட்டி பேசினார். தற்போது தரம் தாழ்ந்து பேசி உள்ளார்.

டாக்டர் சரவணன்

அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தொண்டன் வெகுண்டெழுந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் அண்ணாமலைக்கு எதிராக ஆன்லைனில் புகார் அளிக்க உள்ளனர்.  அண்ணாமலை தரம் கெட்ட அரசியல் வியாபாரி, தமிழகத்தில் வெறுப்பை விதைத்து வருகிறார், பாஜக-வின் மூத்த நிர்வாகிகள் தமிழிசை, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த அரசியலை அண்ணாமலை செய்யவில்லை. அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும், இல்லையெனில் நாக்கு அழுகி விடும்” என கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88