GT Holidays: `இந்தியாவின் சிறந்த டிராவல் பிராண்டு’ என்ற பெருமையைப் பெற்றது GT Holidays!

GT Holidays-இன் விடாமுயற்சிக்கு கிடைத்த விஸ்வரூப வெற்றி…! இந்தியா டிராவல் அவார்ட்ஸின், தென்னிந்தியப் பிரிவில், ‘இந்தியாவின் சிறந்த டிராவல் பிராண்டு’ – என்ற பெருமைக்குரிய அங்கீகாரத்தை GT ஹாலிடேஸ் பெற்றிருக்கிறது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக கிடைத்திருக்கும் இப்பெரும் அங்கீகாரம், எங்களின் விடா முயற்சியையும், நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த விருதை எங்கள் இயக்கப் பணிகள் இயக்குநர் திருமதி. யாமினி கார்த்திக் அவர்கள் பெற்றிருப்பதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவரின் சிறந்த வழிகாட்டுதல், எங்களை இவ்வெற்றி பாதையில் இட்டுச் சென்றிருக்கிறது.

திருமதி. யாமினி கார்த்திக் (‘GT Holidays’ இயக்கப் பணிகள் இயக்குநர்)

இரண்டாவது ஆண்டாக இந்த விருதை வெல்வது GT ஹாலிடேஸின் நிலைத்த தொழில்முறை நெறிமுறைகளையும், மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவையையும், எங்கள் பயணிகள் மத்தியில் நிலைத்த புகழை நிலைநாட்டுவதற்கான உறுதியான கொள்கைகளையும் உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கீகாரம், எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் ஒட்டு மொத்த குழுவிற்கும் கிடைத்த வெற்றி. எங்களின் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், மீடியா நண்பர்களின் ஆதரவும் நம்பிக்கையும் எங்களை இவ்விடத்திற்கு முன்னேற்றி இருக்கிறது.

இந்த பயணத்தில் எங்களை ஆதரித்த ஒவ்வொரு நபருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. இந்த முக்கிய மைல்கல்லை கொண்டாடும் இந்நேரத்தில், GT ஹாலிடேஸ், எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்களுக்கு என்றும் மறக்க முடியாத பயண அனுபவங்களை வழங்க உறுதியாக இருக்கிறது.

உங்கள் ஒத்துழைப்புடன் இந்த பயணத்தை தொடர்ந்து, இன்னும் பல மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களின் இந்த விஸ்வரூப வெற்றியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி.