கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பாதுகாப்புத்துறையின் சூலூர் விமானப்படை தளம் இயங்கி வருகிறது. சமீபத்தில், சூலூர் விமானப்படை தளத்தைச் சுற்றி 4 கி.மீ தொலைவுக்கு கட்டுமானங்கள் கட்ட வேண்டும் என்றால் விமானப்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று சூலூர் விமானப்படை தள நிர்வாகம் கூறியிருந்தது.
இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.
அதேபோல சூலூர் காடம்பாடி ஊராட்சியிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. அப்போது, கட்டுமானங்கள் கட்ட தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விமானப்படை தளத்தில் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து காடம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் சுமார் 22,000 மக்கள் வசிக்கின்றனர். ஏற்கெனவே விமானப்படை தளம் எல்லையை ஒட்டியுள்ள 100 மீ தொலைவுக்கு கட்டுமானங்கள் கட்ட தடை உள்ளது.
அப்படியிருக்கும்போது விமானப்படை தளம் 4 கி.மீ சுற்றுவட்டாரத்தில் கட்டுமானம் அமைக்க தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதற்கு பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.
அதனால் விமானப்படையின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நான்கு கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88