“தனியார் மதுபான பார்கள், டாஸ்மாக் கடைகளை அதிகரித்ததுதான் திமுக அரசின் சாதனை!” – கிருஷ்ணசாமி சாடல்

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் தந்தை செல்லையா கடந்த 25-ம் தேதி அன்று காலமானார். இந்த நிலையில்  கடம்பூர் ராஜூவின் இல்லத்திற்கு நேரில் சென்ற புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செல்லையாயின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கோவில்பட்டியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவுக்கு சீர்குலைந்துவிட்டது.

கிருஷ்ணசாமி

அனைத்து மாவட்டங்களிலும் எதாவது ஒரு இடத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடியது  மது, கஞ்சா போன்றவைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றார்கள். ஆனால், வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாமல் தற்போது  தனியார் மதுபான பார்களையும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளனர். இதுதான் தி.மு.க அரசின் சாதனை. இவைதான் தமிழ்நாட்டில் அதிகமாக கொலைகள் நடப்பதற்கு காரணமாக உள்ளது. எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

இனியாவது விழித்துக் கொண்டு தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.  தி.மு.க-வின் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு திட்டத்தின் காரணமாக கடந்த 14 ஆண்டுகளில் மிகப்பெரிய சமுதாயங்களான தேவேந்திர குல வேளாளரும், ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். இதைவிட சமூக அநீதி இந்த நூற்றாண்டில் வேறு எதுவும் கிடையாது. இதுகுறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் உண்மைத்தன்மையை அறியாமல் இயந்திரத்தனமாக உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு என அறிக்கை அளிக்கின்றனர். 

கடம்பூர் ராஜூ வீட்டிற்குச் சென்ற கிருஷ்ணசாமி

இதுகுறித்து சென்னையில், பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களின் கூட்டத்தை கூட்ட உள்ளோம்.  சென்னையில் உள்ள பல ஐ.ஏ.எஸ். அகாடமியில் இப்போது பதவியில் உள்ள அதிகாரிகள் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. எனவே, குரூப் -1, குரூப்-2 போன்ற பதவிகளுக்கு வினாத்தாள்கள் நிச்சயமாக அந்த மையங்களில் இருந்து வெளியாகிறது. அந்த மையங்களில் படிக்கின்றவர்கள் தான் வேலை வாய்ப்புக்குச் செல்கின்றனர்.” என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88