கோவை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; வீடியோ எடுத்து மிரட்டல் – கல்லூரி மாணவர் கைது; அதிர்ச்சி பின்னணி

கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஶ்ரீ தர்சன். இவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

ஶ்ரீ தர்சன்

அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியை தன் காதல் வலையில் வீழ்த்தி, வீட்டுக்கு அழைத்து சென்று  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதேபோல, தர்சன் மற்றொரு கல்லூரி மாணவியையும் காதலிப்பதாக சொல்லி நெருங்கிப் பழகியுள்ளார்.

அவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை செல்போனில் பதிவு செய்துள்ளார். ஒருகட்டத்தில் தர்சனின் செயல்பாடுகளில் உடன்பாடு இல்லாமல் மாணவிகள் விலகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்சன், அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

மேலும் செல்போனில் பதிவு செய்துள்ள வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

கைது

அதனடிப்படையில் வழக்கு பதிந்த  காவல்துறையினர், ஶ்ரீ தர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு மாணவிகள் அவரை புறக்கணித்த காரணத்தால், தர்சன் சமீபத்தில் மற்றொரு மாணவியை காதலிப்பதாக சொல்லி நெருங்கி பழகி வந்தது தெரியவந்துள்ளது.

இதே பாணியில் தர்சன் மேலும் சில மாணவிகளிடம் நெருங்கி பழகி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88