“ஆம்ஸ்ட்ராங் – ஆருத்ரா – பாஜக… இந்த தொடர்பை விசாரிக்க வேண்டும்!” – சொல்கிறார் திருமாவளவன்

“ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் அல்லது சாதிய சக்திகள் இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா?”

“ஆருத்ரா நிறுவனம் பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும், பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கிற நிலையும் இருக்கிறது. ஆருத்ரா நிறுவனத்தை பா.ஜ.க-வும் ஆற்காடு சுரேஷும் பாதுகாக்க முயற்சித்ததாகவும் தகவல் இருக்கின்றன. இதில் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கு எதாவது ரோல் இருக்கிறதா.. என விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ராங் – ஆருத்ரா நிறுவனம் – பா.ஜ.க என தொடர்புபடுத்தி விசாரிக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. ஆற்காடு சுரேஷின் மனைவியோ காதலியோ பா.ஜ.க-வில் இருப்பதாக சொல்கிறார்கள். கைதானவர்களிலும் பா.ஜ.க-வினர் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே அவர்களுக்கு கட்சிக்கும் லிங்க் இருக்கிறதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் யூகத்தின் அடிப்படையில்தான் சொல்கிறோம். கொலைக்கு பின்னால் அரசியல் சக்திகளோ சாதிய சக்திகளோ இருக்கலாம்.. யாராகவும் இருக்கலாம். அவர்கள் எந்த கட்சியினரானாலும் கைது செய்யப்பட வேண்டும்.”

ஆம்ஸ்ட்ராங் கொலை

“ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும் நீங்கள் சந்தேகம் கிளப்புவது ஏன்?”

“`அண்ணன் கொலைக்கு பழிதீர்த்தேன்’ என பொன்னை பாலு சொல்லும் கதையோடு இது நின்றுவிட முடியாது வெறும் பழிவாங்கும் முயற்சியால் மட்டுமே கொலை நிகழவில்லை. ஆற்காடு சுரேஷ் தரப்பின் கோபத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில்கூட ஒரு மாஸ்டர் மைண்ட் இவர்களை இயக்கியிருக்கலாம். ஆகவே அந்த மாஸ்டர் மைண்டை கண்டுபிடியுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை. இப்போது சரணடைந்திருப்பவர்களை பார்த்தால் `Professional Killers` ஆக தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட முறை, இடம் மற்றும் நேரத்தையெல்லாம் பார்க்கும்போது சந்தேகம் வலுக்கிறது.”

திருமாவளவன்

“ஆருத்ராவையும் பா.ஜ.க-வையும் பேசி தி.மு.க-வுக்கு பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?”

`சரணடைந்தவர்களை வைத்து வழக்கை முடித்துவிடாதீர்கள் என தி.மு.க அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அழுத்தம் தருவது எந்த வகையில் தி.மு.க-வை பாதுகாப்பதாக அமையுமென சொல்லுங்கள். நான் பா.ஜ.க-வை விமர்சிக்கக் கூடாதென சொல்பவன்தான் குற்றவாளியாக இருக்க முடியும்.”

“தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறதே!”

`விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த கட்டண உயர்வையும் ஏற்பதில்லை. தமிழ்நாடு அரசு இம்முடிவினை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88