`கள்ளச்சாராய விவகாரம்: எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருவது..?’ – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 22 பேர் கள்ளச்சாராயத்துக்கு பலியாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக மொத்தம் 65 பேர் கள்ளக்குறிச்சியில் கலாச்சாரயத்துக்கு பலியாகியிருக்கும் சம்பவம் திமுக ஆட்சி நிர்வாகத்தின்மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி – கள்ளச்சாராயம்

இந்த சம்பவத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் ஆணையம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம், கடந்த ஆண்டைப் போலவே சிபிசிஐடி விசாரணை மற்றும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாணரத் தொகை, கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, விற்றதாக சிலர் கைது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கிறது.

இருப்பினும் எதிர்க்கட்சிகள், `கடந்த கள்ளச்சாராய உயிர்பலிகள் ஏற்பட்டபோது சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டபோதிலும் இந்த ஆண்டு கள்ளச்சாராய உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இதில் சிபிஐ விசாரணை வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றன. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் சிபிஐ விசாரணை வலியுறுத்தல் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது…’ என கேள்வி கொடுக்கப்பட்டு, `சரி, தவறு, அரசியல் செய்கின்றனர்’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவில், அதிகபட்சமாக `58 சதவிகிதம் பேர் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சரி’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 34 சதவிகிதம் பேர் அரசியல் செய்கின்றனர் என்றும், 8 சதவிகிதம் பேர் தவறு என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதில் போட்டியிடப்போவதில்லை அ.தி.மு.க முன்பே அறிவித்துவிட்டது. இதனால், பல கட்சிகளும் அதிமுகவின் வாக்குகளின் தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகின்றன. இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கும் நிலையில், காலத்தில் அதிமுக இல்லாதது யாருக்கு சாதகம் என விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லின்கை கிளிக் செய்யவும்… https://www.vikatan.com/

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88