ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் ஆகிறது மத்திய பட்ஜெட்..! நிதி அமைச்சகப் பணியாளர்கள் தீவிரம்!

கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால், 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்றே தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.

இந்நிலையில், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் வருகிற 23-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண்ட் ரிஜிஜு அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 22-ஆம் தேதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் தொடங்கிய இரண்டாம் நாளன்று இந்த நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி முடிந்த ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால், 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்றே தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஜெயித்து, ஆட்சி அமைத்தது. மோடி தலைமையிலான அரசாங்கம் அமைந்து, நிதி அமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமனே பதவியேற்றுள்ளார். எனவே, இந்த நிதி ஆண்டுக்கான முழுப் பட்ஜெட்டையும் அவரே தனது தாக்கல் செய்ய இருக்கிறார்.

மத்திய பட்ஜெட் 2024

பா.ஜ.க கடந்த கால பட்ஜெட்களில் சாதாரண மக்களைக் கவரும் வகையில் பல திட்டங்கள் இல்லாமல் இருந்தது. இந்த முறை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில் பல திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, வருமான வரிச் சலுகை வரம்பு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.

இது தவிர, தொழில் துறை வளர்ச்சிக்கும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம்; கட்டமைப்புத் துறை, விவசாயத் துறைக்கான பல அறிவிப்புகளும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

இந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று சொல்ல முடியுமா?