UK Election: `உங்களை வீழ விட மாட்டேன்..!’ – அமோக வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண் உமா குமரன்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரனின் பெற்றோர் போரின் போது லண்டனில் குடியேறினர். லண்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரன், அங்கேயே பிறந்து படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 2020-ல், கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றினார். அதன் பின்னர் C40 Cities Climate Leadership Group இன் இணைத் தலைவர்கள் சார்பாக இராஜதந்திர மற்றும் சர்வதேச உறவுகளின் இயக்குனரானார்.

உமா குமரன்

அவர் தொழிலாளர் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஆலோசனை உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில், Centre-left Labour கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்ட், போவில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட ஜோ ஹட்சன் 7,511 வாக்குகளை பெற்ற நிலையில், உமா குமரன் மொத்தம் 19,145 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்த வெற்றி குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் பெருமை. என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்கள் குரலாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன். நான் எப்போதும் உங்களை வீழ விட மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உமா குமரன்

இங்கிலாந்தின் 650 இடங்களில் பாதிக்கும் மேலான இடங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், Centre-left Labour கட்சி 400-க்கும் அதிகமான இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. Centre-left Labour கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88