“சேலம் அதிமுக நிர்வாகி கொலை; குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம். கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளரான இவர், நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில், சேலம் மாநகராட்சி 55 வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறும் போலீஸார், சதீஷ் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சண்முகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த கொலை சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. திட்டமிட்டு தெரு விளக்குகளை அணைத்து நெஞ்சை பதற வைக்கும் வகையில் சண்முகம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 55 ஆவது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி கணவர் சதீஷ் உள்ளிட்ட பலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். சண்முகம் ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுக-வில் சிறப்பாக பணியாற்றியவர். மக்களிடம் பழகி நல் மதிப்பை பெற்றவர். எல்லா தேர்தலிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய செயல்திறன் மிக்க தொண்டர். இரண்டு முறை கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர். அவரை கொடூரமாக கொலை செய்து குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88