GRT: ஒளிரும் தூய்மை மற்றும் நம்பிக்கை – ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் `டாஸ்லிங் டைமண்ட் திருவிழா’!

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து அவர்களின் வடிவமைப்புகள் மற்றும் சேவைகளில் தூய்மை, நம்பிக்கை மற்றும் சிறப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பே ஜிஆர்டி ஜூவல்லர்ஸை தென்னிந்தியாவில் 60 ஆண்டுகளாக பல தலைமுறைகளாக நம்பப்படும் ஒரு முதன்மையான நகை நிறுவனமாக உருவாக்கியுள்ளது.

GRT

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஒரு மகிழ்ச்சிகரமான ஷாப்பிங் அனுபவத்திற்காக, நவநாகரீக Dazzling Diamond Festival-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உற்சாகமான கொண்டாட்டமானது வாடிக்கையாளர்கள் கைவினை பொருட்களை அடையவும், உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட வைரம் மற்றும் அன்கட் வைர நகைகளை வாங்குவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு கொண்டாட்டமாகும். சலுகையாக வைரம் மற்றும் அன்கட் வைர மதிப்பில் 25% வரை தள்ளுபடியை பெறலாம் (சாலிடேர்கள் தவிர) மேலும் பிளாட்டினம் நகைகளில் செய்கூலி மற்றும் சேதரத்தின் மீது 30% வரை தள்ளுபடியையும் பெறலாம். இந்த பிரத்யேக சலுகைகள் லைட்வெயிட் வைர நகைகளான ஒரியானாவிற்கும் பொருந்தும்.

ஜி.ஆர்டி ஜூவல்லரஸில் உள்ள அனைத்து வைர நகைகளும் ஜிஆர்டி-யின் டைமண்ட் உத்திரவாதத்துடன் வருகிறது. இது ஒவ்வொரு நிலையிலும் அதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. ஒவ்வொரு வைர நகைகளும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலான விலை, வாழ்நாள் பராமரிப்பு, வெளிப்படையான விலை மதிப்பிடுதல், காரட் உத்தரவாதம், நெறிமுறை சார்ந்த தயாரிப்புகள், HUD முத்திரை மற்றும் திரும்ப பெறும் உத்தரவாதம் ஆகிய நிலைகளுடன் வருகிறது இந்த விரிவான உத்தரவாதமானது, வாடிக்கையாளர்கள் தாங்கள் எவை எவைக்காக பணம் செலுத்துகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதை உறுதிசெய்கிறது.

GRT

ஜி.ஆர்டி ஜூவல்லரஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர், ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், “நாங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த தொழில் நடைமுறைகளை ஒருங்கிணைத்து மிகச்சிறந்த வைர நகைகளை மிகத் துல்லியமாக வழங்குகிறோம்.

மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது, ‘வைரங்கள் மக்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்துள்ளன, மேலும் தலைமுறை தலைமுறையாகக கடைப்பிடிக்கப்படும் உடமைகளாக போற்றப்படுகின்றன. இது ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் உள்ள எங்கள் குழுவை ஊக்குவித்து, எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வைரங்களின் தரத்தை நம்புவதை உறுதிப்படுத்துகிறது.