முதல்வரின் கோரிக்கை… முடிவை மாற்றிய சபாநாயகர்; ஏற்காத அதிமுக – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது அதிமுக. சட்டப்பேரவையை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

எடப்படி பழனிசாமி

அதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபடுபவர்களை வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் குண்டுகட்டாக சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “டிசம்பர் 2001-ல் கள்ளக்குறிச்சிப் போன்ற ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் நடைபெற்று 52 பேர் மரணமடைந்தார்கள். 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரியாக எடுக்கவில்லை என எல்லோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

பா.ம.க தலைவர் ஜி.கே மணி, வேல்முருகன் ஆகியோர் சட்டப் பேரவையிலேயே இது குறித்து 2002 மார்ச் மாதம் உரையாற்றியிருகிறார்கள். ஆனால் தற்போதைய நிகழ்வு குறித்து என் கவனத்துக்கு வந்ததும் நான் தீவிர நடவடிக்க மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களும் பேசிய பிறகு விரிவாக விளக்கமளிப்பேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், அப்போது சரியாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து இப்போது கேள்வி கேட்டுவிடுவார்களோ என்றுதான், அவையின் சட்டதிட்டங்களுக்கு மாறாக செயல்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

அவர்களின் செயல்பாடு காரணமாகவே அவையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெற வேண்டும் என்பதில் கலைஞரும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர்களும் காலந்துகொண்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்ட முதல்வர் நான். சட்டசபை தலைவரான நீங்களும் பல கோரிக்கைகள் வைத்து, பேச வாய்ப்புத் தரலாம் எனப் பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கு நடந்துகொண்ட விதம் தவர்ந்திருக்க வேண்டியதுதான்.

பேரவை வீதி 120-ன் கீழ் பேரவைத் தலைவராக நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும் என்னுடைய வேண்டுகோளாக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும் அனுமதிக்கப்படலாம் இதை சட்டப்பேரவை தலைவர் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்.” எனப் பேசினார். அதைத் தொடர்ந்து அவைத் தலைவர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்து, “முதல்வர் வேண்டுகோளின்படி வெளியேற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் அனுமதி அவையில் இடம்பெற அனுமதிக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார். எனினும் ச்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88