சேலம்: துணை தாசில்தார் தற்கொலை விவகாரம்… ஒருதலைப்பட்சமாக விசாரணை எனப் பெற்றோர் புகார்!

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் நர்மதா. இவரின் கணவர் மணிகண்ட சபரி. இவர் மேட்டூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தேர்தல் துணை தாசில்தார் நர்மதா கடந்த மார்ச் 28-ம் தேதி தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டூர் போலீஸார் தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நர்மதாவின் பெற்றோர் செல்லமுத்து – வெண்ணிலா ஆகியோர் தமிழக முதல்வருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் புகார் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர். அதன் நகலை நேற்று மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கிய ராஜிடம் வழங்கினார்.

நர்மதா

அந்த புகாரில், `மேட்டூர் தாசில்தார் விஜி மனரீதியாக துன்புறுத்தியதால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் முறையான விசாரணை நடத்தாமல், மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு ராணி ஒருதலைபட்சமாக தாசில்தாரை காப்பாற்றும் விதமாக நாங்கள் கூறாததை எல்லாம் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்துள்ளார். எனவே இந்த வழக்கை வேறு ஒரு அதிகாரியை கொண்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி ஆரோக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88