அமெரிக்காவின் மிசோரி (Missouri) நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் (Sister Wilhelmina Lancaster) மே 29, 2019 அன்று 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க மே 18, 2023 அன்று தோண்டி எடுக்கப்பட்டது.

சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர்

அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால்பகுதி தெரிந்திருக்கிறது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது கால்பகுதி அப்படியே இருந்திருக்கிறது. அதன்பிறகு சவப்பெட்டியை திறந்து பார்த்திருக்கின்றனர். அவர் புதைக்கப்பட்டபோது எப்படி இருந்தாரோ அப்படியே 4 ஆண்டுகளுக்குப் பிறகும் இருந்திருக்கிறார்.

உடனே இந்த செய்தி நகரம் முழுவதும் பரவியிருக்கிறது. இது குறித்து மிசோரி தேவாலய மற்றொரு கன்னியாஸ்திரி, “அவரது உடல் இருக்கும் சவப்பெட்டியை தோண்டி எடுக்கும்போதே, அந்தப் பெட்டியில் எதுவும் இருக்காது. வெறும் எலும்புகள் மட்டும்தான் இருக்கும் எனக் கூறினார்கள். ஆனால் முழு உடலும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. மண் விழுந்ததால் அவரது ஒரு கண் பகுதி மட்டும் சற்று அழுகியிருக்கிறது. மற்ற உடல் பாகங்கள் அப்படியே இருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறார்.

சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர்

இந்த செய்தி பரவியைதையடுத்து மிசோரி தேவாலயத்துக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். நீண்ட வரிசையில் நின்று சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் உடலை பார்த்துச் செல்கின்றனர்.

இது குறித்து வெஸ்டர்ன் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், தடயவியல் மானுடவியல் இயக்குநருமான நிக்கோலஸ் வி பாசலாக்வா (Nicholas V Passalacqua) பேசுகையில், “அடக்கம் செய்யப்பட்ட பிறகு உடல்கள் அரிதாகவே தோண்டி எடுக்கப்படுவதால் இது எந்த அளவு பொதுவானது என்று சொல்வது கடினம்.

நீண்ட வரிசையில் மக்கள்

மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் சேதமடையாத மனித உடல்கள் பல கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே பாதுகாக்கப்பட்ட எகிப்திய மம்மிகள் போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் போக் பாடிகள் போன்றவையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.

எனவே, குறைந்த ஆக்ஸிஜன் கொண்ட சூழலில் இருக்கும் உடல்கள் பாக்டீரியா வளர்ச்சியையும் அதன் அணுகளையும் கட்டுப்படுத்தும்” எனத் தெரிவித்திருக்கிறார். சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர்-ன் உடல் மே 29 ஆம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும், பின்னர் அது தேவாலயத்தில் கண்ணாடியில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.