வாசகர்கள் வளமான நலமான வாழ்வு பெற 3-6-2023 அன்று சக்திவிகடனும் புதுச்சேரி நவகோள் லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நவகிரக மகாஹோமம் நடத்த உள்ளது. இதில் கலந்து கொண்டால் நவகிரகங்களால் உருவாகும் தோஷங்கள், பாவங்கள் யாவும் தீரும்.

ஒவ்வொருவருடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட நவகிரகங்களை வணங்குகிறோம். இன்னும் சிறப்பான பலன்களைப் பெற நவகிரக பூஜைகளும் யாகங்களும் செய்கிறோம்.

நவகிரக மகாஹோமம்

ஜோதிட நூல்களின் கூற்றுப்படி சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சந்திரனை வணங்கினால் புத்தி பலம், புகழ் கிடைக்கும். செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். புதனை வழிபட்டால் கலைகள் வளரும். குரு பகவானை வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும். ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும். கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் என்கின்றன.

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பலனை அளிக்கிறது என்றால், நவகிரகங்களின் நாயகனான ஈசன் சகலத்தையும் அளிக்க வல்லவன் என்கின்றன புனித நூல்கள். அதிலும் கருவறையிலேயே நவகோள்களையும் அடக்கி வைத்து ஆளும் நவகோள் லிங்கேஸ்வரரின் அருள் இருந்தால் எந்த காரியமும் ஈடேறும் என்பதில் ஐயமே இல்லை எனலாம்.

நவாம்பிகை

உலகிலேயே நவகோள் லிங்கேஸ்வரர் கோயிலில் மட்டுமே கருவறையில் உள்ள சிவபெருமானை நவகோள்களும் வணங்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். அதனாலேயே எம்பெருமான் இங்கு நவகோள் லிங்கேசுவரராக விளங்குகிறார். நவகோள் லிங்கேஸ்வரரை வணங்குவதால் பௌர்ணமி நாளில் வணங்கி வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்படும் இடர்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதிலும் பௌர்ணமி நாளில் இங்கு நடைபெறும் நவகோள் இடரறு வேள்வியில் சங்கல்பம் செய்து கொண்டால் நவகிரக தோஷம் நீங்கி காரிய ஸித்தி, ஆயுள் வளம், நோயற்ற பேரின்ப வாழ்வு, திருமணப் பேறு, குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, இழந்த செல்வம் திரும்பப் பெறல், தம்பதி இடையே ஒற்றுமை எனப் பல நன்மைகளைப் பெறலாம் என்கிறது தலவரலாறு.

தம்முள் யார் பெரியவர் என சண்டையிட்டுக் கொண்ட நவகிரகங்களைக் கண்டித்து அருள் செய்த இடமே நவகோள் காப்பேறு என்ற புனித தலம். இங்குள்ள ஈசன் தடைகளை அகற்றி காரிய ஸித்தி அருளும் தயாபரன் என்கிறார்கள். இங்குள்ள அம்பிகை நவாம்பிகை மகாவரப்ரஸாதி என்கிறார்கள். இவளை வணங்கிட மங்கல வாழ்வும் குடும்ப உறவும் மேம்படும் என்கிறார்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

நிறைந்த வைகாசி பௌர்ணமி நாளில்தான் இங்கே நவகிரகங்கள் கூடி ஐயனை வழிபட்டு, பிணக்குகள் நீங்கிப் பெருமை கொண்டன என்கிறது தலவரலாறு. இதேநாளில் இங்கே 3-6-2023 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை இங்கே நவகிரக இடரரு வேள்வி எனும் நவகிரக மகாஹோமம் நடைபெற உள்ளது. இதில கலந்து கொண்டு உங்களின் எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். குறிப்பாக நோய்நொடிகள் நீங்கி பூரண ஆயுள் பெற, காரியத் தடைகள் நீங்க, கல்வி-கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு, சம்பள உயர்வு, நல்ல வேலை வாய்ப்பு – வெளிநாட்டு யோகங்கள் பெற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

நவகோள் லிங்கேஸ்வரர் கோயில்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம் மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.