முதலாவது மகளிர் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியின் தொடக்க பேட்டர் ஷபாலி வர்மா ஆட்டமிழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி

முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.

image

இறுதிப் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள்!

இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. பிளே ஆப் சுற்றின் முடிவுப்படி, டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2வது இடத்தில் மும்பையும், 3வது இடத்தில் உ.பி. வாரியர்ஸும் இடம்பிடித்தன. இதையடுத்து, இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றதில் உ.பி. வீழ்த்தி மும்பை தகுதி பெற்றது.

தொடக்கத்திலே நிகழ்ந்த சர்ச்சை அவுட்!

இந்த நிலையில் மகளிர் முதலாவது ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றப்போவது யார் என இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று பலப்பரீட்சை தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, தொடக்க பேட்டர்களாகக் களமிறங்கிய கேப்டன் மேக் லானிங்கும், இந்திய அணியின் அதிரடி பேட்டருமான ஷபாலி வர்மாவும் அதிரடியில் இறங்கினர். குறிப்பாக 2வது ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த ஷபாலி வர்மா, ஃபுல் டாஸாக 3வது பந்தை எதிர்கொண்டார். அது பேட்டில் பட்டு கேட்சாக மாறியது. இதனால் டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

முறையிட்ட ஷபாலி வர்மாவும்.. ட்ரெண்டான நோபால் சர்ச்சையும்

அவுட் கொடுத்த் உடனேயே, ’நோ பால்’ அறிவிக்குமாறு மைதான நடுவரிடம் ஷபாலி வர்மா முறையிட்டார்.

image

ஆனால், அது நோ பால் இல்லை என நடுவர்களால் சொல்லப்பட்ட நிலையில், ஷபாலி வருத்தத்துடனேயே பெவிலியன் திரும்பினார். ஷபாலிக்கு அவுட் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக டெல்லி மகளிர் அணி தரப்பிலும், ரசிகர்கள் தரப்பிலும் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிது. மும்பை அணிக்கு எதிராக கடுமையான பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

சீட்டுக் கட்டுப்போல் சரிந்த விக்கெட்டுகள்.. கடைசியில் நிகழ்ந்த மேஜிக்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்த அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மேக் லானிங் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஒருகட்டத்தில் டெல்லி  அணி 16 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. டெல்லி அணி குறைவான ரன்களை எடுக்க ஷபாலி வர்மாவின் விக்கெட்டும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால், அந்த அணி 80 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என மும்பை அணி எதிர்பார்த்தது.

image

ஆனால், கடைசிக் கட்டத்தில் களத்தில் நின்ற ஷிகா பாண்டேவும், ராதா யாதவ்வும் 20 ஓவர்களை எதிர்கொண்டதுடன் டெல்லி அணி 100 ரன்களுக்கு மேல் எடுக்கவும் வழிவகுத்துக் கொடுத்தனர். ஷிகா பாண்டே 17 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 27 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, இந்த இணை 29 பந்துகளில் 50 ரன்களை எடுத்து மும்பைக்கு அதிர்ச்சியைத் தந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் லிஸி வாங், ஹைலே மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அமீலா கெர் 2 விக்கெட் எடுத்துள்ளார். இதில் மேத்யூஸ் 4 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டனாக வீசியதுடன் மொத்தமே 5 ரன்களைத்தான் வழங்கியிருந்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.