மலைப் பகுதியில் பெரிய கரடி ஒன்றிடம் இளம்பெண்கள் சிக்கிய நிலையில், அதனிடமிருந்து அவர்கள் எப்படி புத்திசாலித்தனமாக உயிர் தப்பினார்கள் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் சிறுவயதில் கரடிகள் குறித்து நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்று, காட்டு வழியே சென்று கொண்டிருந்த இரண்டு நண்பர்களில் ஒருவன், எதிரே கரடி வருவதைப் பார்த்து மற்றொரு நண்பனை அங்கேயே விட்டுவிட்டு, தன் உயிரைப் பாதுகாப்பதற்காக அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொள்வான். ஆனால், மற்றொருவனோ கரடி தன்னிடம் நெருங்கிவரும் சூழலிலும் அதைக் கண்டு பயப்படாது அங்கேயே படுத்துக்கொள்வான். பின்னர் அவனை நெருங்கிய கரடி, நுகர்ந்து பார்த்தபடி எதுவும் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிடும்.

இந்த செவிவழி கதையை நாம் சிறுவயதில் கேட்டிருந்தாலும், இதுபோன்ற அரிய நிகழ்வு சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது, பலராலும் பழைய வீடியோ (2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோ) எனச் சொல்லப்படுகிறது. ஆனாலும், தற்போது வைரலாகி வருகிறது

image

மலைப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்ற பெண்களை கரடி ஒன்று நெருங்குவதும், அதிலிருந்து அவர்கள் தப்பிக்கச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் 3 பெண்கள் செல்கின்றனர். அப்போது ஒரு பெரிய கரடி மெல்ல நடந்து சென்று, அதில் ஓர் இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நிற்கிறது. பின்னர், இரண்டு கால்களில் மனிதர்களைப் போன்று நின்று கொண்டு, அந்த இளம்பெண்ணின் பின்னால் இருந்து அவரை அணுகுகிறது. பிறகு, அவரைச் சற்று நேரம் மோப்பம் பிடித்தபடி இருக்கும் அந்த கரடி, அவரை இழுத்தும் தள்ளுகிறது. மேலும் அந்தப் பெண்ணின் முடியைப் பிடிக்கவும், முகத்தில் மோப்பம் பிடிக்கவும் கரடி முயல்கிறது.


அதன் பின், எதுவும் செய்யாமல் திரும்பி நடந்து செல்ல தொடங்குகிறது. அப்போதும் அந்த இளம்பெண் அமைதியாக நிற்கிறார். ஆனால், அவருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பெண் அமைதியாகவே நிற்கிறார். ஆனால் வேறொரு பெண்ணோ கரடி தன்னை தாக்க வரும் என்ற அச்சத்தில் கொஞ்ச கொஞ்சமாய் அதிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்கிறார். அதனுடன் அந்த வீடியோவும் முடிவடைகிறது. இதை அவர்களுக்குப் பின்னால் சென்றவர்கள் படம்பிடித்துள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. ஆனால், இணையத்தில் வைரலாகி வருகிறது. OddIy Terrifying என்ற பயனர் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ, இதுவரை 6.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

image

பொதுவாக வனவிலங்குகள் தங்களுக்கு தொந்தரவு ஏற்படும்போது, அவை தாக்கும் இயல்பு கொண்டவை. அதுபோன்ற சூழலில் அவர்கள் அமைதி காத்த நிகழ்வுதான் இணையத்தில் வைரலாக காரணமாகி இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.