இசை எப்படி ஒரு மனிதனை ஆட்கொள்கிறது?.. அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

இசையின் ஒலி

இசை இதற்கு சரியான தமிழ் வார்த்தை ஒப்புதல். இசையும், ஒப்புதலும் நம்மை தலை அசைக்க வைக்கும். அத்தகைய இசையின் ஆற்றலைப்பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

இந்துஸ்தானி, கர்நாடகம், கஜல், மேற்கத்திய இசை, கிராமிய இசை என எத்தனையோ இசை வகைகள் உள்ளன. இசை நம் வாழ்க்கையுடன் அசைக்கமுடியாத ஒன்று. உடல் அசைவும் இசை தான். நம் இதயம் துடிப்பதும் இசை தான். மூளையிலிருந்து செயல் படும் நியூரோ டிரான்ஸ்மீட்டர் கூட ஒரு வித இசை தான். மனிதன் பிறந்தாலும் இசை உண்டு, இறந்தாலும் இசை உண்டு. நமது முகத்தில் மகிழ்சியை வரவழைக்கக்கூடியது இசை. கண்ணீரை வரவழைப்பதும் இசை. நமது உணர்சிகளைத் தூண்டக்கூடியதும் இசை.

image

இவ்வளவு ஏங்க… ஒரு சரியான இசையால் மழைப்பொழிவிக்க முடியும், ஒரு பழத்தையும் பழுக்க வைக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுண்டு. இசை நம் வாழ்க்கையோடு பிண்ணி பினைந்துள்ளது. இத்தகைய இசையானது ஒலியின் வடிவம். ஒலியின் அதிர்வெண்களே இசை ஆகும். கண் தெரியாதவர்கள் ஒலியின் அதிர்வெண்ணைக்கொண்டு, இடத்தை,செயலை, பொருளை அறிந்துக்கொள்வார்கள். இசை நம் விருப்பதிற்கு இணங்க ஒருவனை நல்ல பாதையில் இழுத்துசெல்லும், தீயவழியிலேயும் இழுத்துச்செல்லும். இசையால் நம் வாழ்கையை மாற்றி அமைக்க முடியும். நாம் சஞ்சலமாக இருக்கும் சமயங்களில் நமக்கு பிடித்த இசையை கேட்கும் பொழுது, நம் மனதில் இருக்கும் துயர் நீங்கி லேசான மனநிலையைப்பெறுவோம். மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து இசை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கருவுற்றுருக்கும் பெண்கள் அவர்களுக்கு பிடித்த இசையை கேட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் மருத்துவரின் அறிவுரை. இத்தகைய இசையானது நம் மூளையின் போதை.

image
இத்தகைய இசை போதைக்குக் காரணம் நம் மூளையில் உள்ள நியூரான் செல்களின் தூண்டுதல் தான். ஒருவருக்கு வயலின் இசை பிடிக்கும் , வேறொருவருக்கு மிருதங்க இசை பிடிக்கும், சிலருக்கு தபேலா…. இவ்வாறு அவரவர்களுக்கு பிடித்த இசையைக் கொண்டு, அம்மனிதனின் மன முதிர்சியையும், ரசனையையும், அவனது குணாதிசயத்தையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால் இசை என்பது ஒரு தெரபி ஆகும், மருத்துவமனைகளில் ஒலி எழுப்பத்தடை என்னும் விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள். ஏனெனில் நோய்வாய்பட்டிருக்கும் ஒருவரின் மூளையானது ஒலியினை விரும்பாது. அச்சமயம் அது அமைதியாய் இருக்கவே விரும்பும்.

image

ஒருவர் கத்தும்பொழுது அல்லது அதீத குரல் எழுப்பும்பொழுது நமது மூளையானது சில வினாடிகள் ஸ்தம்பித்து விடும் (ப்ளாக் அவுட்) அச்சமயம் மூளைக்கு வரும் எந்த ஒரு கட்டளையையும் அது ஏற்காது. இத்தகைய ப்ளாக் அவுட்டானது, திடீரென்று ஏற்படும் செயல்களாலும், தூக்கமின்மையாலும் அல்லது ஒலியாலும் ஏற்படக்கூடியது. அதீத இசை அல்லது ஒலி ஒருவரின் இறப்பிற்கும் காரணாமாகலாம். சூரிய ஒளியினை குவிப்பானது ஒரு நெருப்பை ஏற்படுத்துவது போல…. ஒலியின் குவிப்பு ஒரு உயிரையும் எடுத்துவிடும். ஏனெனில் ஒரு நிலை வரை தான் நமது காது, மூளையும் கூர்மையான ஒலியின் அளவை தாங்கிக்கொள்ளும். இதை அடிப்படையாகக் கொண்டு சில திரைப்படங்கள் கூட வந்துள்ளது.

வௌவால் இரவில் கண் தெரியாது, இருந்தாலும் அது இரவில் தான் தனது உணவை தேடி பறக்கும். அவ்வாறு பறக்கும் பொழுது அது எதிலும் இடித்துக்கொள்ளாமல் பறக்கிறது. அது எப்படி என்பதை கவனித்து இருக்கிறீர்களா?.. அதற்கு காரணம் இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இந்த ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால்.

ஒலியினால் ஏற்பட்ட அனுபவம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள்.

ஜெயஸ்ரீ அனந்த்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM