ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் குல்தீப் யாதவ் அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்திய விதம், ஒரு நிமிடம் ஷேன் வார்னேவை நினைக்க வைத்தது என்றே சொல்லலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், போட்டியில் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் யாதவ், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

image

3 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரியை ஆட்டம் காண செய்து, பிட்ச்சில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் விழிக்கச்செய்து போல்டாக்கிய விதம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வல்லுநர்களையும் வாயடைக்க வைத்துள்ளது. அப்படி ஒரு அற்புதமான சாகசத்தை கண்முன்னே நடத்தி காட்டியுள்ளார் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ்.

குல்தீப்பை எதிர்கொள்ள இயந்திரங்களை வைத்து பயிற்சி எடுத்தார்கள்!

ஒரு சுழற்பந்துவீச்சில் இடதுகை ரிஸ்ட் ஸ்பின் என்பது ஒரு கலை. இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மேற்பரப்பில் சிறிது கடியுடன் பந்து வீசுகிறார்கள். கிரிக்கெட்டில் உள்ள நுட்பமான விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த பந்துவீச்சானது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை எல்லாம் நிறுத்திவிட்டு ஒருநிமிடம் நம் கண்ணை வேறெங்கும் சுழற்றாமல் பார்த்துக்கொள்ளும். அதனால் தான் குல்தீப் யாதவ் தன்னுடைய வாழ்நாள் பார்மில் இருந்தபோது, அவரை எதிர்கொள்வதற்காக இயந்திரங்களை வைத்தெல்லாம் அவரை எதிர்கொள்ள பயிற்சியை மேற்கொண்டது இங்கிலாந்து அணி.

Birthday Special: WATCH – Kuldeep Yadav's peach of a delivery to dismiss Babar  Azam at CWC 2019 | CricketTimes.com

பாபர் அசாமை வீழ்த்திய மாயாஜால பந்துவீச்சு!

குல்தீப் யாதவ் 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் போது, உலகின் நம்பர் 1 வீரராக இருந்த பாபர் அசாமிற்கு எதிராக ஒரு மாயாஜால பந்தை வீசுவார். அதை பாபர் அசாம் எதிர்த்து ஆட கூட செய்திருக்க மாட்டார், அதை ஒன்றும் செய்ய வேண்டாம் என தடுப்பாட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் அவருடைய தடுப்பாட்டத்தையும் மீறி என்ன நடக்கிறது என்றே பேட்ஸ்மேன் அறியாதவாறு அந்த பந்தானது மிடில் ஸ்டம்பை தாக்கி விக்கெட்டை தட்டித்தூக்கும். வாழ்நாள் சிறந்த பந்தை வீசிய குல்தீப் யாதவ், அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்துவதில் ஒரு பங்கை தனது மாயாஜால பந்துவீச்சில் நிகழ்த்தி காட்டியிருப்பார்.

image

கனவு பந்தை வீசிய குல்தீப் யாதவ்!


ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய பழைய பார்மை இழந்த குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் மீண்டும் ஒரு கனவு பந்தை வீசியுள்ளார். 39ஆவது ஓவரின் முதல் பந்தை வீசிய குல்தீப் யாதவ் ஓவர் த விக்கெட்டிலிருந்து இடது கை பேட்டரான அலெக்ஸ் கேரிக்கு குட் லெந்த் பந்து ஒன்றை வீசுவார். அதை எதிர்த்து ஆட விரும்பாத அலெக்ஸ், தடுப்பாட்டத்தையே வெளிப்படுத்துவார். ஆனால் அவருடைய கண்ணையும் அறிவின் நுட்பத்தையும் மீறிய அந்த பந்து, விக்கெட்டில் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்தி லெக் சைடில் பிட்சாகி ஆஃப் சைட் ஸ்டம்பின் நுனியை சென்று தாக்கும். அதை சிறுதும் எதிர்பாராத அலெக்ஸ் என்ன நடந்தது என்று பந்தையும் ஸ்டம்பையும் பார்ப்பார். அதே ஆச்சரியத்தை தான் பந்துவீசிய குல்தீப் யாதவும் அனுபவிப்பார்.

image

அது ஒரு அழகியல் உணர்வு..

சிலபந்துகள் பேட்ஸ்மேனை மட்டுமல்லாமல் வீசிய பந்துவீச்சாளரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படியான ஒரு பந்தைதான் இன்றைய நாளில் குல்தீப் யாதவ் வீசியிருந்தார். “ கற்பனை செய்து பாருங்கள் ஒரு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஒரு பேட்ஸ்மேனை விக்கெட்டிலிருந்து ஒரு கூக்ளி வழியாக கவனத்தை ஈர்த்து சென்று ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தி விக்கெட்டை பறிக்கிறார். பந்து காற்றில் அழகாக தூக்கி வீசப்படுகிறது. அதை எளிதாக தடுத்து நிறுத்திவிடலாம் என நினைத்து தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துகிறீர்கள். பந்தானது காற்றிலேயெ டிரிஃப் ஆகி, தனது கோணத்தை மாற்றி, பிட்ச்சிலிருந்து கடிந்து கொண்டு, உங்கள் கணிப்பை மீறி விலகி சென்று ஸ்டம்ப்பை தாக்குகிறது. என்ன நடந்தது ஏதோ விசேசமாக நடந்துவிட்டது என்று பேட்ஸ்மேனுக்கே தோன்றும்”. ஒரு பேட்ஸ்மேனுக்கு அந்த உணர்வை தோன்ற வைப்பது சுழற்பந்துவீச்சின் ஆகச்சிறந்த சிறப்பம்சம் மற்றும் அழகியல் ஆகும். அதை அதிகளவில் பேட்ஸ்மேனுக்கு உணர்த்திய பெருமை நிச்சயம் ஷேன் வார்னே எனும் ஒரு சுழல் மன்னனுக்கே சேரும் என்றால் மிகையாகாது.

image

ஒரு சுழற்பந்துவீச்சு எப்படி இருக்க வேண்டும் என்றும், அதன் அழகியல் என்னவென்றும் ஒருமுறை ஷேன் வார்னே கூறியது நினைவில் வருகிறது. “ஒரு சுழற்பந்துவீச்சின் அழகியல் என்பது, ஒரு பேட்ஸ்மேனை அனைத்தையும் மறக்கச்செய்து விக்கெட்டில் ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என உணரவைக்க வேண்டும்” என்பது தான் என்று முன்னர் ஷேன் வார்னே கூறியிருந்தார். அதை மீண்டும் கண்முன் கொண்டுவந்து காட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.