தக்காளி, வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க்கும்…

குறைந்த சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் வகையில் கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்துக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முருங்கை சாகுபடி, மதிப்புக்கூட்டல், ஏற்றுமதிக்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தக்காளி, வெங்காயம் எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்த 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மலை காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்க பின்னேற்பு மானியமாக 2.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

டிராகன் ப்ரூட், அவகடோ உள்ளிட்ட சிறப்பு பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

டிராகன், அவகேடா, பேரீட்சை போன்ற பயிர் சாகுபடிகளை அதிகரிக்க 1000 ஹெக்டேர் பரப்பு விரிவக்கம் செய்யப்பட்டு இதற்காக பயிற்சி வழங்கப்டும் செய்யப்படும்.

நுண்ணீர் பாசனம் திட்டத்துக்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட குளிர்கால காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்க 2.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

கோடையில் குளிர்ச்சியான பழங்களையும், குளிர்காலங்களில் வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களையும் பல்லாண்டு கால பழமர கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பழங்கள் உற்பத்தி முக்கியம். வரும் ஆண்டில் 10 லட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, சீத்தா அடங்கிய தொகுப்பு வழங்கபடும். 300 கிராம பஞ்சாயத்துக்கு வழங்கபடும்

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

கோவையில் கறிவேப்பிலை சாகுபடிக்கு 2.54 கோடி ஒதுக்கீடு

கோவையில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 2.54 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ‘கோயமுத்தூரில் அதிக கருவேப்பிளை பயிர் விளைவதால் அங்கு ஒரு தனி தொகுப்பு உருவாக்கப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

1000 ஹெக்டரில் மிளகாய் சாகுபடி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலமாக மாற்றபடும். இப்பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றபட்டு மிளகாய் பயிர் செய்யப்படும்.

கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

பலா இயக்கத்துக்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • பண்ரூட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு ஏற்படுத்தப்படும். பலா தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தபடும். புதிய ரகங்களை பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர்.

  • பண்ருட்டி பலாவுக்கு சாகுபடி, மதிப்புக்கூட்டல் செய்ய விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவர். பலா சாகுபடிக்கு 21 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • பலா இயக்கத்துக்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை 2,500 ஹெக் டேராக உயர்த்த நடவடிக்கை.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

மதுரை மல்லிக்கு இயக்கம்…

மல்லி சாகுபடிக்கு மதுரையில் தொகுப்பு ஒன்று தொடங்கப்படும்.

மல்லி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தரமான மல்லிகளை செடிகளை ராமநாதபுரத்தில் உற்பத்தி செய்து விரைவில் வழங்கபடும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

வட்டார அளவில் ஒரு விஞ்ஞானி

பயிர் சாகுபடி விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள வட்டாரத்துக்கு ஒரு விஞ்ஞானி திட்டம் செயல்படுத்தப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை

  • சர்க்கரை துறையிலும் அக்கறை காட்ட ஆர்வமோடு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு.

  • சாகுபடி மற்றும் வானிலை அறிவிப்புகளை உடனுக்குடன் அறிவிக்க வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படும்.

  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை, ஒரு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கபடும். சிறப்பு ஊக்கத்தொகைகாக ரூ.195 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

  • கரும்பு விவசாயிகளுக்கு மொத்தமாக 214 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

  • பாரம்பர்ய நெல்லை பாதுகாத்து பரவலாக்க 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் அலுவலர்!

உழவர்/அலுவலர் தொடர்பு திட்டம் 2021-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12,000 கிராம ஊராட்சிகளில் வேளாண் அலுவலர் சென்று வருகிறார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை இவர்கள் சென்று வருகிறார்கள். கிராமத்துக்கு ஒரு வேளாண் அலுவலர் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. தற்போது 3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் அலுவலர் என்ற முறையில் செயல்படுத்தப்படும். இதை 2.O என்ற முறையில் செயல்படுத்தப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

விவசாயிகளுக்கு அங்ககச் சான்றிதழ் பெற ரூ.10,000 மானியம்

  • பயறு வகை பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும். பயறு வகைகளை பெருக்க 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • குறைந்தபட்ச ஆதார விலையில் பயறு வகைகள் கொள்முதல் செய்யப்படும்.

  • எண்ணெய் வித்து பயிர்கள் உற்பத்தி செய்ய 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்து சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்.

  • Grains என்ற பெயரில் உழவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இணையதளம் தொடங்கப்படும்.

  • விவசாயிகள் அங்ககச் சான்றிதழ் பெறுவதற்கு ரூ.10,000 மானியமாக வழங்கப்படும்.

  • பருத்தி இயக்கத்துக்கு 12 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படும்.

  • தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

  • கால்நடை வளர்ப்பு, வட்டியில்லா கடன் தர 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

வேளாண் கருவிகள் வழங்க 15 கோடி நிதி ஒதுக்கீடு

  • மாநிலம் முழுவதும் தேக்கு போன்ற உயர் ரக மரகன்றுகள் வழங்க 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • மாநிலம் முழுவதும் தேக்கு போன்ற உயர் ரக மரகன்றுகள் வழங்க 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டது. அதை வெற்றியடைந்ததை தொடர்ந்து மேலும் வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை, மின்னணு முறையில் செயல்படுத்தப்படும்.

  • 385 வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு முறையில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்படும்.

  • மாற்றுப்பயிர் சாகுபடிக்கு 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • ஆதி திராவிட விவசாயிகளுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பழங்குடியின விவசாயிகளுக்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வேளாண் கருவிகள் வழங்க 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வேளாண் துறை மூலம் வட்டார அளவில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

குளத்து வண்டல் மண்… விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை!

ஏரி மண்ணில் மண் வளம் இருப்பதால் அதை எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி கொள்வதற்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும். இதை ஊக்குவிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மண் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்து குளத்து வண்டல் மண்ணில் நிறைந்துள்ளதால் அதை விவசாயிகள் பயன்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை செயல்படுத்த 50 கோடி நிதி!

விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதற்கு 10,000 ஹெக் டேருக்கு விரிவுப்படுத்தப்படும். இதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

அங்கக வேளாண்மை குறித்த ஆலோசனைகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

நீலக்கரியில் ஐந்து ஆண்டுகளில் 5கோடி நிதி ஒதுக்கீட்டில் அங்க வேளாண்மையை அதிகரிக்க சிறப்பு திட்டம்.

அங்கக சான்றிதழ் பெறுதல், புதிய அங்கக அங்காடி தொடங்குதல் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும்..

நம்மாழ்வார் அங்கக வேளாண் விருது வழங்கப்படும். 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த விருது குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும். நெல்லுக்கு பின் பயிர் சாகுபடிக்கு 24 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் பரிசு ரூ.5 லட்சம்!

கம்பு, குதிரைவாலி பயிர்களை சாகுபடி செய்து அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த விளைச்சல் பரிசு சிறுதானியத்துக்கும் உண்டு.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

எல்லாரும் தங்க சம்பா அரிசி சாப்பிடுங்க… தங்கமா இருப்பீங்க… வேளாண் அமைச்சர் கலகல

நெல் ஜெயராமன் மரபு சார் நெல் உற்பத்தி மையம் சார்பில் 136 டன் பாரம்பர்ய நெல் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கம்பு , கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு கல்வி நிலையங்களுக்கு வழங்கபடும்

பாரம்பர்ய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.123.60 கோடி இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிறுதானிய உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும்

சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கருக்கும் வகையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

சிறுதானிய உற்பத்தி, சிறுதானிய நுகர்வை அதிகரிக்க நடவடிக்கை.

சிறுதானிய உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும்.

5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

சிறுதானிய விவசாயிகளை ஒருங்கிணைத்து பயிற்சிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும்.

அரசு விடுதிகளில் சத்துள்ள சிறுதானியம் உணவாக அளிக்கப்படும்.

கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும். கிராமம், குக்கிராமங்களிலும் இது அமைக்கப்படும்.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம்

2504 கிராமங்களில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இலவச தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

தென்னை மரங்கள் இல்லாத கிராமங்களில் ஒரு குடும்பத்துக்கு தலா 2 தென்னை கன்றுகள் என 2.15 லட்சம் கன்றுகள் 254 கிராம பஞ்சாயத்துக்கு வழங்கப்படும்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்துக்கு ரூ. 230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“விவசாயிகளின் கருத்துகள் கேட்டே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது”

வேளாண்மை செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தலைமை செயலாகத்தில் உட்கார்ந்துகொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் அல்ல. விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளை அழைத்து கருத்துகள் கேட்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

127 லட்சம் உணவு தானியங்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“வறட்சி, வெள்ளபாதிப்புகளை தாங்கி வளரும் பயிர் ரகங்களுக்கு முக்கியத்துவம்”

  • 1,50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  • மண்ணிற்கேற்ற பயிர் ரகங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

  • மண்ணின் தன்மைகேற்ப பயிர்கள் பரிந்துரைக்கப்படுகின்ற்ன, தமிழகத்தில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

  • 119,97 டன் உணாவு உற்பத்தி செய்யப்பட்டு சாதனை

  • ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

  • 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன

-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது…

புன்செய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மகசூல் அதிகரிக்க இலக்கு.

வறட்சி, வெள்ளப்பாதிப்புகளை தாங்கி வளரும் பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக் கை எடுக்கப்படும்.

அறிவியல் தொழில்ட்பத்தை பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்த முக்கியத்துவம்

1.93 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது.

– உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பச்சைத் துண்டு அணிந்து பட்ஜெட்டை வாசித்தார் பன்னீர் செல்வம்..! 

தமிழ்நாடு சட்டசபையில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட்து. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்ய, பச்சைத் துண்டு அணிந்து வந்தார் அமைச்சர் பன்னீர் செல்வம். பச்சைத் துண்டு அணிந்தே பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

முதல்வருக்கு சிறுதானிய கூடை அளித்து வரவேற்றார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

சிறுதானிய கூடை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்ய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் வருகை தந்தனர்.

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன் முதல்வரை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பூங்கொத்துக்கு பதிலாக சிறுதானியங்கள் அடங்கிய கூடையை முதல்வருக்கு பரிசாக அளித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து மரியாதை செலுத்தினார், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!

 3-வது வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023

திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. “இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யவில்லை. நாங்கள்தான் முதலில் அறிமுகம் செய்கிறோம்” எனப் பெருமையுடன் கூறி, வேளாண்மைக்குத் தனி பட்ஜெட்டை 2021-ம் ஆண்டு தி.மு.க அரசு தாக்கல் செய்தது.

அது தொடர்பாக, கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “முதலாம் ஆண்டு தவழ்ந்த குழந்தை, இரண்டாம் ஆண்டு நடந்த குழந்தை, மூன்றாம் ஆண்டில் ஓடத் தொடங்கிவிடும்” என்றார். அதன்படி, 3-வது நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது.

இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, வேளாண் உழவர் சந்தைகளை மேம்படுத்துவது, சிறுதானிய பயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதுடன், நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவதோடு, அங்கக (இயற்கை) வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோபாலபுரம் சென்று வணங்கினார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் | எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்கிறார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அடுத்த மாதம் 21-ம் தேதிவரை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரும் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். 

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2023 தாக்கல் செய்வதற்கு முன் கோபாலபுரம் சென்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் மரியாதையை நிமித்தமாக அவரது படத்திற்கு முன் பட்ஜெட் அறிக்கையை வைத்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வணங்கினார்.

22-ம் தேதி விடுமுறையாக இருப்பதால், 23, 24 மற்றும் 27, 28-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு அமைச்சர்கள் பதில் உரை அளிப்பார்கள். தொடர்ந்து மார்ச் 29-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி, ஏப்.21-ம் தேதி வரை நடைபெறும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.