பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, உறவினரின் திருமண விழாவில் சிகரெட் பிடித்தது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இவர், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து, பதி பட்னி அவுர் வோ என்கிற படத்தில் நடித்தார். இந்த இரு படங்களுக்கும் சிறந்த பிலிம்பேர் விருதை அனன்யா வென்றார். இதைத் தொடர்ந்து, பூரி ஜெகநாத்தின் பன்மொழிப் படமான ‘லைகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்தும் நடித்தார்.

image

இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டேயின் உறவினரான அலன்னா என்பவருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான மெகந்தி விழாவில் நடிகை அனன்யா பாண்டே நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் தோழிகளுடன் சேர்ந்து சிகரெட் பிடித்துள்ளார்.

இதை வீடியோவாக எடுத்த Reddit வலைதள பயனர், அதை அந்த சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்துடன், “அனன்யா புகைபிடிப்பவராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை” எனப் பதிவிட்டுள்ளார் அவர். அந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகிய நிலையில், விவாதத்தை கிளப்பியது. அந்த நபர் வெளியிட்ட பதிவுக்கு மற்றொரு நபர், “மிகவும் அழகான அனன்யா, புகைப்பிடிப்பவரா? என்னால் நம்ப முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இன்னொரு நபரோ, “நான் உண்மையில் ஆச்சரியப்படுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் பலரும் “இது அவரது தனிப்பட்ட விஷயம். இதைவைத்து அவரின் குணத்தை மதிப்பிடுவது சரியல்ல” “யாராக இருந்தாலும், புகைப்பிடிப்பது தவறு. இதேபோல ஆண் பிரபலங்களும் செய்கின்றனர், ஆனால் அவர்கள் ஒழுக்கம் சார்ந்து விமர்சிக்கப்படுவதில்லை. நாமும் இவரை ஒழுக்கம் சார்ந்து விமர்சிக்க வேண்டியதில்லை” “பிரபலங்கள் சிகரெட் மது போன்ற விஷயங்களில் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.