ஆலங்கட்டி மழை சில நேரங்களில் வருவதுண்டு. இன்னும் சொல்லப்போனால், மீன் மழையைக் குறித்துக் கூட கேள்விப் பட்டிருப்போம். ஆனால் சீனாவில் `புழு மழை’ பெய்ததாக வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

மழை

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில் வரிசையாக உள்ள காரின் மேற்புறத்திலும், தெருக்களிலும் புழுக்கள் கொட்டிக் கிடக்கின்றன. விழும் புழுக்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் குடை பிடித்து பொது மக்கள் செல்கின்றனர்.

இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் நிலையில், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. 

பலரும் வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வந்தாலும், இந்த வீடியோ ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாகச் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

விநோத மழைபொழிவுக்கான காரணம் மர்மமாக உள்ள நிலையில், பூச்சிகள் சுழலில் சிக்கிக்கொள்கையில், இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளன என சில அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.