இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 262 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

image

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா, நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 50 ரன்னிற்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் கவாஜாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நல்ல நிலைமையில் தான் இருந்தது. ஆனால் 23ஆவது ஓவரை வீச வந்த அஸ்வின் லபுசனேவை எல்பிடபள்யூ மூலம் அவுட்டாக்கி வெளியேற்றியதோடு, தொடர்ந்து களத்திற்கு வந்த ஸ்டீவ் ஸ்மித்தையும் டக் அவுட்டாக்கி, ஒரே ஓவரில் உலகின் நம்பர் 1, நம்பர் 2 வீரர்களை வெளியேற்றி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச்செய்தார். பின்னர் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து காப்பாற்ற போராடிய கவாஜா, ஹேண்ட்ஸ்கோம் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து, ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்கு எடுத்துச்சென்றனர்.

5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவை திணற வைத்த நாதன் லயன்!

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் இருவரும், முதல் நாள் முடிவில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் 2ஆவது நாளையும் இந்தியாவை அப்படியே விளையாட நாதன் லயன் அனுமதிக்கவில்லை. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன், கே எல் ராகுலை 17 ரன்களில் வெளியேற்றினார். பின்னர் அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மாவை போல்டாக்கி வெளியேற்றிய லயன், அதே ஓவரில் புஜாராவையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றி இந்தியாவிற்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.

image

54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற, கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இந்தியாவை நல்ல டோட்டலுக்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் நீ போகலையா என்பது போல், மீண்டும் பந்துவீச வந்த நாதன் லயன், ஸ்ரேயாஸ் ஐயரையும் வெளியேற்றினார். 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இறங்கினர். ஜடேஜா பவுண்டரிகளாக அடித்து ரன்களை உயர்த்த ஸ்பீட் பிரேக்கர் போல வந்த டோட் முர்பி ஜடேஜாவை லெக் பை விக்கெட் மூலம் வெளியேற்றினார்.

அவுட்டா நாட்-அவுட்டா என சர்ச்சையில் அவுட் கொடுக்கப்பட்ட விராட் கோலி!

image

5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், முழு பொறுப்பும், அழுத்தமும் விராட் கோலியின் மேல் திரும்பியது. விராட் கோலியும் அனைத்தையும் தோளில் தாங்கியபடி சிறப்பான தடுப்பாட்டத்துடன், அவ்வப்போது பவுண்டரிகளையும் தட்ட ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 50ஆவது ஓவரை வீசவந்த மேத்யூ குலேமன், விராட் கோலியை லெக் பை      (LBW) மூலம் அவுட் கேட்க விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் அம்பயரின் முடிவை விராட் கோலி எதிர்க்க முடிவு 3ஆவது அம்பயரிடம் சென்றது. ரீப்ளேவில் விக்கெட்டை பரிசோதித்த போது பந்தானது ஒரே நேரத்தில் பேட்டிலும், விராட் கோலியின் கால்களிலும் படுவது தெரிந்தது. மேலும் பந்து பேட்டில் இருந்து செல்லும் போது திசை மாறி வெளியே சென்றது, அதிலிருந்து பந்தானது பேட்டில் பட்டுத்தான் திரும்புகிறது என்பதும் தெரிந்தது. ஆனாலும் விக்கெட்டானது ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக கொடுக்கப்பட்டு விராட் கோலி பெவிலியன் திரும்பினார்.

image

100 ரன் பார்ட்னர்சிப் போட்ட அஸ்வின்-அக்சர் பட்டேல்!

கோலி, பரத் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த நிலையில் 8ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் திணற, 81ஆவது ஓவர் வீச கேப்டன் பேட் கம்மின்ஸ் அஸ்வின் விக்கெட்டை கைப்பற்றி அந்த ஜோடியை பிரித்து வைத்தார். 5 பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் சேர்த்து அஸ்வின் வெளியேற, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த அக்சர் பட்டேல் 74 ரன்களில், டோட் முர்பி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

image

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் கடினமான நேரத்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 74 ரன்கள் எடுத்து, இந்தியாவை 263 ரன்களுக்கு எடுத்து சென்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.