செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மாற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தபட்டு உள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட் எனலாம். இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற விளையாட்டு வீரர்களை காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகம். அதனால்தான் கிரிக்கெட் வீரர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவர்களை மொய்த்துவிடுவார்கள். அப்படி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி திரும்பியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா. செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்த பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தபட்டு உள்ளது. மும்பையில் இன்று செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

image

என்ன நடந்தது?

மும்பையில் தனது நண்பர்களுடன் பிரித்வி ஷா தனது காரில் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருக்கிறார். அந்த ஹோட்டலுக்கு வந்த கும்பல் ஒன்று பிரித்வி ஷாவிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புவதாக கேட்டிருக்கிறார்கள். அவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த கும்பல் மீண்டும் ஒரு செல்ஃபி எடுக்க கேட்டிருக்கிறார்கள். இதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தவுடன் அந்த கும்பல் பிரித்வி ஷாவுடன் வாய் தகராறில் ஈடுபட்டிருக்கிறது.

இதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகிகள் பிரித்வி ஷாவிடம் மோதலில் ஈடுபட்ட கும்பலை வெளியே அனுப்பி இருக்கிறது. அப்போது திடீரென்று மறைந்திருந்த கும்பல் பிரித்வி ஷாவின் காரை நிறுத்தி அவரிடம் மோதலில் ஈடுபட்டிருக்கிறது. அப்போது பிரித்வி ஷாவிடம் பணம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் உங்கள் மேல் பொய் புகார் கொடுப்போம் என்றும் அந்த கும்பல் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை பிரித்வி ஷா பொருட்படுத்தவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் பிரித்வி ஷாவின் சொகுசு காரில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.

இதனை அடுத்து பிரித்வி ஷாவின் நண்பர்கள் அவரை வேறு ஒரு காரில் அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக பிரித்வி ஷா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


2013ம் ஆண்டு தனது பள்ளிக்காக விளையாடிய விளையாட்டில் 330 பந்தில் 546 ரன்கள் இவர் எடுத்தார். 2016ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த பிருத்வி ஷா, 2018இல் அணியின் கேப்டனாக உலக கோப்பையை வென்று கொடுத்தார். அப்போதே அடுத்த சச்சின் இவர்தான் என விமர்சகர்களால் பிரித்வி ஷா கொண்டாடப்பட்டார். 2018இல் இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரித்வி ஷா, தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.

நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா எதிர்பாராவிதமாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி விளையாட இடைக்கால தடை பெற்றது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடைக்காலத்துக்குப் பின்னரும் நீண்டகாலமாக அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வந்தார். அண்மையில்தான் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடர் மூலமாக அணிக்கு மீண்டும் திரும்பினார். ஆனால் அந்த தொடர் முழுவதும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.