இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஆம்புலன்ஸில் கொண்டுவரும் போது ரிஷப் பண்ட் பேசியது குறித்து பேசியுள்ளார் 108 ஆம்புலன்ஸின் மருந்தாளர்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார். ரூர்க்கி அருகே முகமதுபூர் ஜாட் பகுதியில் இந்த விபத்து நடந்தது, காயமடைந்த ரிஷப் ரூர்க்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கொடூரமான விபத்தில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

image

இந்நிலையில், 108 ஆம்புலன்ஸில் ரிஷப் பண்டுடன் பயணித்த மருந்தாளர் மோனு குமார் என்பவர், ரிஷப்பை சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது என்ன நடந்தது என்பது பற்றி Aajtak.in உடன் பேசியுள்ளார்.

என் பெயர் ரிஷப் பண்ட், நான் இந்திய கிரிக்கெட் அணி வீரர்!

image

விபத்து நடந்த இடத்திற்கு சென்றது குறித்து பேசியிருக்கும் மோனு குமார், ரிஷப் பண்டிற்கு விபத்து நடந்தபோது, அவ்வழியாகச் சென்ற பேருந்து ஓட்டுநர், தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து ரிஷப்பை வெளியே எடுத்துள்ளார். அதன் பிறகு, அவர் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்தார். அதிகாலை 5:40 மணியளவில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. ஸ்டிரெச்சரில் ஏற்றியபோது ரிஷப் பண்டின் கண்ணில் காயம், மூக்கில் இருந்து ரத்தம், முதுகு தோல் உரிக்கப்பட்டிருந்தது, காலிலும் காயம் இருந்தது. அந்த நேரத்தில், மோனு விபத்துக்குள்ளான அவருடைய பெயரைக் கேட்டபோது, ரிஷப் மருந்தாளரிடம் ”தான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பந்த்” என்று கூறியுள்ளார்.

அண்ணா எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல கொஞ்சம் வலி ஊசி போடுங்க!

image

அதையடுத்து, ரிஷப் மருந்தாளரிடம், “அண்ணா எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல கொஞ்சம் பெயின் இன்ஜெக்ஷன் போடுங்க” என்று கூறியுள்ளார். மோனு 108ல் அனுமதி வாங்கி வலிக்கு ஊசி போட்டுள்ளார். பின்னர் ரிஷப் மோனுவை நல்ல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதனால் மோனு குமார் அவரை அந்த இடத்திலிருந்து 10-12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரூர்க்கியின் சக்ஷாம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விபத்து எப்படி நடந்தது?- ஏன் காரை நீங்களே ஓட்டுநீர்கள்?

விபத்து எப்படி நடந்தது என்று ஆம்புலன்சில் ரிஷப்பிடம் கேட்டபோது, என்ன நடந்தது என்று ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளார். கண்களை மூடிவிட்டு, பின்னர் கார் தீயால் சூழப்பட்டதைப் பார்த்துள்ளார்.

image

அதே சமயம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ரிஷப்பிடம் ஏன் காரை தானே ஓட்டுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ரிஷப் கூறுகையில், ”தனக்கு எப்போதும் தனியாக வாகனம் ஓட்டும் வாய்ப்பு கிடைக்காது, எனவே டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது குடும்ப வீட்டிற்கு செல்வதற்காக காரை எடுத்துச் சென்றேன்” கூறியுள்ளார்.

யாருக்கு போன் செய்யலாம்? – எனக்கு என் அம்மா நம்பர் தவிற எந்த நம்பரும் நியாபகம் இல்லை!

image

ரிஷப் பண்டிடம் குடும்பத்தில் யாரை அழைக்கலாம் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு அவர், எனது தாயாரின் எண் தவிர வேறு யாருடைய எண்ணும் எனக்கு நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது அவர் சொன்ன எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர், போலீசார் வந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.