புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த இடத்தில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை போலீசார் அதிரடியாக அகற்றினா். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 30-ம் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே நடைப்பயற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அங்கு திடீரென 2 அடி உயரத்தில் யானையின் கற்சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி வந்தனர்

image

இது பற்றிய தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார், அனுமதியின்றி இங்கு சிலை வைக்கக்கூடாது என்று அதனை அகற்றுமாறும் உத்தரவிட்டனர். ஆனால் சிலையை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிலையை அகற்ற காலக்கெடு கொடுத்து விட்டு சென்றனர்.

போலீசார் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீத ரெட்டி தலைமையில் போலீசார் இன்று இரவு லட்சுமி யானையின் சிலையை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஏற்கனவே கூறியபடியே சிலை அகற்றப்படுகிறது என்று போலீசார் கூறினர்.

image

இதை பொதுமக்கள் ஏற்க மறுத்த நிலையில் அங்கிருந்த சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். தொடர்ந்து போலீசார் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அப்புறப்படுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தவற விடாதீர்: ”இறக்கும் போதும் என் உயிர காப்பாத்துனா லெட்சுமி யானை” – பாகன் வைத்த உருக்கமான கோரிக்கை!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.