தெலுங்கானாவில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி ஒருவர், தமது மகள்கள் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் லிங்கம்பேட்டை மண்டலம், மேகரம் கிராமத்தை சேர்ந்தவர் புட்டா ஆஞ்சநேயுலு. இவர் மேகரம் பகுதியில் உள்ள தமது விவசாய நிலத்தில் ஏரியில் இருந்து வரும் தண்ணீரால் விளைநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் அங்கு கூடியிருந்தவர்கள் அவரை கீழே இறங்கும்படி கூறியும் இறங்காததால் அவரது இரு மகள்களையும் வரவழைத்து கீழே இறங்க வலியுறுத்தினர். ஆனாலும், குழந்தைகளின் கண் முன்னே விவசாயி ஆஞ்சநேயலு செல்போன் டவர் மீது ஏறி தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.

image

பின்னர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

தமது மகள்கள் கண் முன்னே விவசாயி ஒருவர் செல்போன் டவரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.