இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் ஜாஹித் மஹ்மூத் அறிமுகமான போட்டியிலேயே மோசமான சாதனையை படைத்துள்ளார்.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. நேற்று தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே பாகிஸ்தான் அணியின் இளம் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பிரித்தெடுத்த இங்கிலாந்து அணி ஒரு நாள் இன்னிங்ஸிலேயே பல சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகை ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்தது.

முதல் நாளில் இங்கிலாந்தின் சாதனைகள்!

image

முதல் செஸ்ஸனில் 175 ரன்கள் அடித்து அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் ரன்கள் என்ற சாதனையை படைத்தது இங்கிலாந்து.

முதல் இன்னிங்க்ஸ் மற்றும் முதல் நாளிலேயே 4 இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்தனர்.

முதல் நாள் முடிவில் 506 ரன்கள் அடித்து 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற ரெக்கார்டை பதிவு செய்தது இங்கிலாந்து.

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த ஹரி ப்ரூக் டெஸ்ட் போட்டியில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை சேர்த்தார்.

506/4 என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் பவுலர் படைக்ககூடாத மோசமான சாதனை!

image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக களம் கண்டிருக்கிறார் லெக் ஸ்பின்னரான ஜாஹித் மஹ்மூத். அவர் தான் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை உடைத்திருந்தாலும், அறிமுக போட்டியிலேயே படைக்ககூடாத மோசமான சாதனையை படைத்துள்ளார்.

33 ஓவர்கள் வீசிய ஜாஹித் மஹ்மூத், 7.12 எகானமியில் 235 ரன்கள் விட்டுகொடுத்து அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அடில் ரசீத் 163/0 ரன்களை கொடுத்திருந்ததே மோசமான பதிவாக இருந்தது, அதை முறியடித்து முதல் வீரர் என்ற என்ற மோசமான ரெக்கார்டை படைத்துள்ளார் ஜாஹித் மஹ்மூத்.

image

அதுமட்டுமில்லாமல் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் அவர், அதிக எகானமியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து மிக மோசமான பதிவை படைத்துள்ளார். அதில் இரண்டாவது இடத்தில் 7+ எகானமியில் 180 ரன்களுடன் இம்ரான் தாஹீர் பிடித்துள்ளார்.

657 ரன்களை துறத்தும் பாகிஸ்தான் அணி 83/0 என்ற நிலையில் முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.