நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது இந்திய அணி.

பொதுவாக இந்திய அணியின் எதிர் அணிகளாக பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் போன்ற அணிகள் பார்க்கப்பட்டாலும், அமைதியாக பல இந்திய அணிக்கு எதிராக பல தோல்விகளை பரிசளித்து வருகிறது நியூசிலாந்து அணி. ஐசிசி தொடர்களில் இருந்து தொடங்கி, டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என அனைத்திலும் டாமினேட் செய்து வருகிறது நியூசிலாந்து அணி. அந்த வகையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மோசமான ரெக்கார்டை பதிவுசெய்துள்ளது இந்திய அணி.

image

ஐசிசி தொடர்களில் இந்தியா-நியூசிலாந்து

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்கள், சாம்பியன்ஷிப் தொடர்கள் என எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு தொடரிலும் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி 1975 தொடங்கி 2021 வரை எதிர்கொண்ட பல போட்டிகளில் அதிக தோல்வியையே சந்தித்துள்ளது.

image

முக்கியமாக 1992 உலகக்கோப்பையில் தொடங்கிய தோல்வியானது, 1999 உலகக்கோப்பை, 2000-01 நாக்அவுட் சீரிஸ், 2007 & 2016 டி20 உலகக்கோப்பை, 2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி தொடர் தோல்விகளையே நியூசிலாந்து அணிக்கு எதிராக சந்தித்து வருகிறது இந்திய அணி. ”ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் 8 போட்டிகளில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பையில் எதிர்கொண்ட ஒருபோட்டியில் கூட நியூசிலாந்து அணியை வென்றதில்லை” இந்திய அணி.

உலகக்கோப்பை நாக்அவுட் போட்டிகளில் தோல்வி

2000-2001 ஐசிசி நடத்திய நாக் அவுட் சீரிஸில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணின் கேப்டன் கங்குலி 117 ரன்கள் அடித்து 264 ரன்களை இந்திய அணி பெற்றிருந்த நிலையிலும், 265 என்ற இலக்கை துறத்திய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

image

2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 239 ரன்களில் நியூசிலாந்து அணியை சுருட்டினாலும், இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 95 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து போட்டியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை கனவைத்தொலைத்தது.

image

2021 டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் அனைத்து அணிகளையும் தோற்கடித்து அதிக புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் 2 இன்னிங்க்ஸிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி 217 & 170 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் எளிதான இலக்கை துறத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

image

2021 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகள் தோல்வியை சந்தித்த இந்திய அணி, நியூசிலாந்தை வெற்றிபெற்றால் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் என்ற நிலையில் தோல்வியடைந்து தொடரை விட்டே வெளியேறியது.

image

ஒருநாள் போட்டிகளில் மோசமான ரெக்கார்டு

தற்போது நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி 300 ரன்களை கடந்தும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்து ஒரு அணிக்கு எதிராக அதிக தொடர் தோல்விகளை நியூசிலாந்து அணிக்கு எதிராக பதிவு செய்துள்ளது இந்தியா.

IND vs NZ 4th ODI: Embarrassing Records Add To India's Crushing Loss |  Cricket News

2019 உலகக்கோப்பையின் தோல்விக்கு பிறகு 2019-2020ல் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என தோல்வியடைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது நடந்திருக்கும் போட்டியிலும் தோல்வியடைந்து தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா.

image

நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி அடுத்து நடைபெறவிருக்கும் 2 போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றுமா இல்லை அல்லது இந்த தொடரையும் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வியடைந்து மிக மோசமான ரெக்கார்டை பதிவு செய்யுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.