உலக கால்பந்து அரங்கில் உள்ள ஒவ்வொரு வீரர்களின் நீண்ட கால கனவாக, ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் ஒருமுறையாவது பங்கேற்று விட வேண்டும் என்று இருக்கும். இத்தொடரில் பங்கேற்க வயது வித்தியாசம் என ஏதுமில்லை, எனவே ஒரு அணியில் பல இளம் மற்றும் வயது மிகுந்த வீரர்களும் இடம்பெற்றிருப்பர். கத்தாரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், மெக்சிகோ அணியின் கோல் கீப்பர் அல்பிரிடோ தலவெரா (40 வயது) தான் இந்த தொடரின் அதிக வயதான வீரராக அறியப்படுகிறார். அவரைப் போல், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இதுவரை விளையாடியவர்களில் மிகவும் அதிக வயதுடைய வீரர்கள் சிலரை இங்கே காணலாம்.

image

எஸ்சம் எல்-ஹடாரி, (45 வயது)

உலகக் கோப்பையில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற பெருமையை எகிப்து அணியின் எஸ்சம் எல் ஹடாரி பெற்றுள்ளார். 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கோல் கீப்பரான எஸ்சம் எல்-ஹடாரி 45 வயதில் விளையாடினார். சவூதி அரேபியாவுக்கு எதிரான பெனால்டி ஷாட்டை அவர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் பெனால்டி ஷாட்டை கோல் விழ விடாமல் தடுத்த மூத்த வீரர் என்ற விருதையும் அவர் பெற்றார்.

image

ஃபரிட் மாண்ட்ராகன், (43 வயது)

கொலம்பியா அணியின்  ஃபரிட் மாண்ட்ராகன் 2014 உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் களத்தில் இறங்கியபோது அவருக்கு 43 வயது. எஸ்சம் எல்-ஹடாரிக்கு முன்னதாக உலகக் கோப்பையில் விளையாடிய அதிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார். இன்னும் சில ஆச்சரியமான ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார் ஃபரிட் மாண்ட்ராகன். 2014 உலகக் கோப்பைக்கு முன்னதாக முன்பு, அவர் 1998 உலகக் கோப்பையில் விளையாடி இருந்தார். இரு உலகக் கோப்பை தொடர்களுக்கு இடையே மிக நீண்ட இடைவெளியில் ஆடியிருக்கிறார் இவர். 2014 உலகக் கோப்பை தொடரின் பிளேஆஃப் சுற்றில் பிரேசில் அணியிடம் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியதும் ஓய்வை அறிவித்தார் ஃபரிட் மாண்ட்ராகன்.

image

ரோஜர் மில்லா, (42 வயது)

கேமரூன் அணியின் ரோஜர் மில்லா உலகக் கோப்பையில் விளையாடிய மிகவும் வயதான மூன்றாவது வீரர் ஆவார். அதிக வயதில் கோல் அடித்தவர் கேமரூனின் ரோஜர் மில்லா. 1994-ம் ஆண்டு தொடரில் ரஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பந்தை வலைக்குள் உதைத்த போது அவரது வயது 42 ஆண்டு 39 நாட்கள். 77 ஆட்டங்கள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலான கால்பந்து பயணத்தில், ரோஜர் மில்லா 43 கோல்களை அடித்திருக்கிறார்.

image

பாட் ஜென்னிங்ஸ், (41 வயது)

1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டியில் பலம்வாய்ந்த பிரேசிலுக்கு எதிராக ஆடுகளத்தில் இருந்தபோது, வடக்கு அயர்லாந்து கோல்கீப்பர் பாட் ஜென்னிங்ஸுக்கு 41 வயது. 1964 மற்றும் 1986 க்கு இடையில் தனது நாட்டிற்காக 119 விளையாட்டுகளில் பங்கேற்ற பிறகு, பாட் ஜென்னிங்ஸ் அதே ஆண்டில் தனது ஓய்வை அறிவித்தார்.

image

பீட்டர் ஷில்டன், (40 வயது)

இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன் 1990 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய அதிக வயதுடைய வீரர் ஆவார். 1986 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர் டீகோ மரடோனா அடித்த ‘ஹேண்ட் ஆஃப் காட்’ கோல் இன்றளவும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த போட்டியில் கோல் கீப்பராக இருந்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் பீட்டர் ஷில்டன்.

image

ஃபார்மிகா, (41 வயது)

பிரேசில் அணியின் மிட்ஃபீல்டர் ஃபார்மிகா, தனது 41வது வயதில் 2019 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய மிக வயதான கால்பந்து வீராங்கனை ஆவார். 1995ஆம் ஆண்டில் அறிமுகமான ஃபார்மிகா, பிரேசில் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 2021இல் ஓய்வு பெற்றார்.

தவற விடாதீர்: ’அவர்களுக்கு மட்டும் தொடர் வாய்ப்பு; இவர்கள் புறக்கணிப்பா?’-ட்விட்டரை சூடேற்றிய ரசிகர்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.