கண்கவர் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற கானாவுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டியிலேயே அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி!

ஆட்டம், கொண்டாட்டம், ஆரவாரம், அமைதி என ரசிகர்களுக்கு திக் திக் என திகைப்பை ஏற்படுத்தியது நேற்றை போர்ச்சுகல் கானா இடையேயான போட்டி. இதற்கு முக்கிய காரணம் முந்தைய போட்டிகளில் அர்ஜென்டினா பெனல்டி சூட் அவுட் முறையில் கோல் அடித்து முன்னனிலை பெற்ற நிலையிலும், சவுதி அரேபியாவிடம் இரண்டு கோல்களை வாங்கி தோல்வியடைந்தது. அதேபோல் ஜெர்மனி ஜப்பான் இடையேயான போட்டியிலும் ஜெர்மனி பெனல்டி சூட் அவுட் முறையில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், ஜப்பான் அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

image

அர்ஜெண்டினா போல் போர்ச்சுகல் முதல் கோல்! திக் திக நிலையில் ரசிகர்கள்

இதையடுத்து நேற்று போர்ச்சுகல் கானா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியிலும் பெனல்டி சூட் அவுட் முறையில் ஒருகோல் அடித்து போர்ச்சுகல் முன்னிலை பெற்றது. ஆனால், கானா அணி கோலை திருப்பிய நிலையில், அர்ஜென்டினா ஜெர்மனி அணிகளுக்கு நேர்ந்த சோகம் போர்ச்சுகல் அணிக்கு நேர்ந்துவிடுமோ என ரசிகர்களை பதபதைக்க வைத்தது. இறுதியில் போர்ச்சுகல் அணி 3 : 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பலம்வாய்ந்த போர்ச்சுகல் அணி கானா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் டிராவில் முடிந்தது.

image

பெனால்டி சூட் அவுட் வாய்ப்பை கோல் ஆக மாற்றிய ரொனால்டோ!

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த பெனால்டி சூட் அவுட் வாய்ப்பை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ கோலாக்கி தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் கானா அணி வீரர் ஐயூ ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து விறு விறுப்பான ஆட்டத்தின்; 78 வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர்கள் பொலிக்ஸ் ஒரு கோலும் 80-வது நிமிடத்தில் லியோ ஒரு கோலும் அடித்தனர். இதைத் தொடர்ந்து அனல் பறந்த ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் கானா அணி வீரர் புகாரி ஒரு கோல் அடித்தார். இந்நிலையில், போர்ச்சுகல் அணி கானா அணியை 3 : 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

imageimage

ரொனால்டோ புதிய சாதனை?

இந்நிலையில், ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் (2006, 2010, 2014, 2018 மற்றும் 2022) பங்கேற்று விளையாண்டு வரும் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (37) தான் பங்கேற்ற அனைத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தாக தகவல்கள் வெளியானது.

ஆனால், உண்மை இதுதான்.. சாதனை இவருடையது!

இந்நிலையில், இந்த சாதனையை படைத்த முதல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்ல. இதற்கு முன்பாக இதே சாதனையை பிரேசில் வீராங்கனை மார்டா வியேரா டா சில்வா படைத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எது எப்படியோ உலகக் கோப்பை வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்ததும் சாதனை தானே.

வைரலாகும் ரொனால்டோ போட்டோ!

இதனிடையே ரொனால்டோ தன்னுடைய தலையால் பந்தினை முட்டும் போட்டோ ஒன்று இணையத்தை ஆட்கொண்டுள்ளது. இவரால்தான் இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என அவரது ரசிகர்கள் போட்டோவை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.