கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பிரேசில் செர்பியாவை வென்றது.

முட்டல் மோதலுடன் நீயா நானா என களம் கண்டுள்ள வீரர்களை உற்சாகப்படுத்த வந்திருக்கும் ரசிகர்களை, மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக, கால்பந்து தொடரில் நேற்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் G பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து அணி தனது எதிரணியான கேமரூன் அணியை எதிர்கொண்டது.

இதில், ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி வீரர் எம்போலோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்காததால் 1 : 0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி கேமரூன் அணியை வென்றது.

image

இதையடுத்து மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மற்றொரு போட்டியில் H பிரிவில் இடம் பெற்றுள்ள உருகுவே அணி தென் கொரியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் சமனில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் G பிரிவில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரேசில் அணி, செர்பியா அணியுடன் மோதியது. முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், விறு விறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62 மற்றும் 73 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணி 2 : 0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை தோற்கடித்து வெற்றிபெற்றது.

image

பிறந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்து கொண்டாட மறத்த சுவிட்சர்லாந்து வீரர் பரீல் எம்போலோ

பிறந்த நாடான கேமரூனுக்கு எதிராக கோலடித்த சுவிட்சர்லாந்து வீரர் அதனைக் கொண்டாட மறுத்த செயல்; அனைவரது நெஞ்சங்களையும் ஈர்த்துள்ளது.

குரூப் G பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் மோதின. இதில், சுவிட்சர்லாந்து அணி 1 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்து அணி வீரர் ப்ரீல் எம்போலோ, ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் உலகக் கோப்பை அரங்கில் பதிவு செய்த அந்த கோலை அவர் கொண்டாடவில்லை.
முன்னதாக கேமரூன் நாட்டில் பிறந்த 25 வயதான ப்ரீல் எம்போலோ, சுவிட்சர்லாந்து நாட்டுக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர், தனது இளம் வயதில் குடும்பத்துடன் கேமரூன் நாட்டில் இருந்து பிரான்ஸ் சென்று பின்னர் அங்கிருந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

image

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டுக்காக சர்வதேச அளவில் 12 கோல்களை பதிவு செய்துள்ள இவர், கேமரூன் அணிக்கு எதிராக இன்றையப் போட்டியில் கோலடித்த அவர், அமைதியாக அப்படியே கடந்து சென்றார். உலகக் கோப்பை வரலாற்றில் தாய்நாட்டுக்கு எதிராக வேறு ஒரு நாட்டுக்காக விளையாடி கோலடித்த முதல் வீரரான அவரது செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.