`சூரரைப் போற்று’ சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா எடுத்து வெற்றிகரமாக ஓடி பலராலும் பாராட்டப்பட்ட படம். பிரபல விமான நிறுவனம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நடத்திய கேப்டன் கோபிநாத்தின் கதைதான் சூரரைப் போற்று.

சுதா கொங்கரா

இந்தப் படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா ‘பயோபிக்’ படமாக எடுக்கும் வேலைகள் நடந்துவருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடந்துவருவதாகவும், வருகிற 2023-ல் சுதா கொங்கரா, ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் வேலையில் இறங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது!

ரத்தன் டாடா

இந்தப் படத்தில் ரத்தன் டாடாவாக நடிப்பதற்கு அபிஷேக் பச்சனையும் சூர்யாவையும் அணுக வாய்ப்பு இருப்பதற்காக சொல்லப்பட்டாலும், இது தொடர்பாக முறையான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று படத்தை இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கிறார். அக்‌ஷய் குமார் இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.