பா.ஜ.க-வின் மத்திய அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக இருப்பவர் கவுசல் கிஷோர். இவர் உத்தரப்பிரதேசத்தின் மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாவார்.

இவர் சமீபத்தில் டெல்லியில் இளம்பெண் ஷரத்தா கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக “படித்த பெண்கள் இதுபோன்ற உறவுகளில் இருக்கக் கூடாது. இந்தச் சம்பவங்களிலிருந்து நாம் பாடங்களைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் படித்த பெண்களிடம் நடைபெறுகின்றன” எனக் கூறியது பெரும் சர்ச்சையானது.

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

இந்த நிலையில், கவுசல் கிஷோரின் மருமகன் நந்த் கிஷோர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், “உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள வீட்டில் நந்த் கிஷோர் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டது. அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அவர் ஒரு ப்ராப்பர்டி டீலர். அவர் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.