ஹெச்சிஎல் ஷிவ் நாடார் தனது பதவியிலிருந்து ராஜினமா செய்து, தனது குழுமம் பொறுப்புகளுக்கு வாரிசாக தனது மகள் ரோஷினியிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து, பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாரிசிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

இதை போல், இந்தியாவில் முக்கிய வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், தனது மகன் ஜெய் கோடக்விற்கு நிர்வாகத்தை கொடுக்க போகிறார் என்ற செய்தி வெளிவந்துக்கொண்டே இருந்தன. இந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என தற்போது உதய் கோட்டாக் முற்று புள்ளி வைத்துள்ளார்.

இந்தியாவின் பணக்கார வங்கியாளரின் மகன் ஜெய் கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் நிறுவனத்தை வழிநடத்தும் போட்டியில் இல்லை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதய் கோட்டாக் பதவி காலம் முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்த 6 மாதத்திற்குள் அடுத்த சி.இ.ஓ வை தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

image

முன்னதாக, உதய் கோடாக்கிற்கு பிறகு சிஇஒ யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. தனது வாரிசுக்கு முன்னுரிமையா அல்லது வங்கி துறையில் பல வருடம் அனுபவம் கொண்ட கேவிஎஸ் மணியன் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி தொடந்து எழுந்துவந்தது. ஜெய் கோட்டாக், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த ஜெய் கோட்டாக்கிற்கு மெக்கன்சி & கோ மற்றும் கோல்டுமேன் சாச்சஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இருப்பினும், கடந்த 5 வருடமாகக் கோட்டாக் மஹிந்திரா வங்கியில் பணியாற்றி வருகிறார்.

வர்த்தகத்தில் கோட்டாக் மஹிந்திராவின் வங்கி பங்குகள் தொடர்ச்சியாக சரிந்து வருவதை தொடர்ந்து, கோட்டாக் மஹிந்திரா வங்கியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் பல மாற்றங்கள் நடத்துவந்தன. 

”ஜெய் இன்னும் இளமையாக இருக்கிறார். அவர் தகுதியின் அடிப்படையில் இன்னும் முன்னேற வேண்டும். அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் வாரியம் அவர்களின் தேர்வை அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என மணியன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

மேலும் தற்போது, ‘புதிய சிஇஓ, சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் உட்பட உள்கட்டமைப்பு நிதியுதவி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றத்திற்கு நிறுவனத்தின் உந்துதலுக்கு வழிகாட்டுவார்’ என கேவிஎஸ் மணியன் கூறியுள்ளார். கோட்டாக் மஹிந்திராவின் அடுத்த சிஇஓ ஜெய் கோட்டாக் இல்லை என்பதால் போட்டியின்றி கேவிஎஸ் மணியன் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் – ”உங்க காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா? GST வரியை நிறுத்திவிடுவோம்” – மம்தா ஆவேசம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.