பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே அடைந்த தோல்விக்கு பிறகு அரையிறுதிக்கான தகுதியை முற்றிலுமாக இழந்திருந்த நிலையில், நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதால் பிறகு கடைசி போட்டியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது உண்மையில் அதிசயம் தான், ஆனால் எங்களை இனி வெளியேற்றவே முடியாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் ஆலோசகரான மேத்யூ ஹைடன்.

இந்திய அணியிடம் முதல் போட்டியில் தோல்வியடைந்தத்தை அடுத்து, வெற்றி பெற வேண்டிய மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. அதன்பிறகு கிட்டதட்ட பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் தான் இருந்தது. ஏனென்றால் பாகிஸ்தான் பிரிவில் இருந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் சிறப்பாக செயல்பட்டு முதல் இரண்டு இடத்தை பிடித்திருந்தனர்.

image

இந்நிலையில், போட்டியை வென்றாலே போதும் என்ற நிலையில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணி, போட்டியின் அழுத்தம் காரணமாக பரிசாகவே வெற்றியை நெதர்லாந்திடம் கொடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் அரையிறுதி போவதற்கான வாய்ப்பு இன்னும் ஒருமுறை பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்ட பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியை வீழ்த்தி 4ஆவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து ஒரு மிராக்கலை நிகழ்த்தியது.

image

பாகிஸ்தான் அரையிறுதிக்கான போட்டியில் நாளை 1.30 மணிக்கு நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் நீண்ட நேர உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார் அணியின் ஆலோசகரான மேத்யூ ஹைடன். இந்த தொடரில் எங்கிருந்து நாம் உள்ளே வந்திருக்கிறோம், இது முற்றிலும் மிராக்கல் என்று தான் சொல்ல வேண்டும், நாம் நம்முடைய முயற்சியில் சிறப்பாக செயல்பட்டால் டி20 போட்டிகளில் எதுவும் சாத்தியம் என்று வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியிருந்தார்.

image

அப்போது பேசிய மேத்யூ ஹைடன், “ இது ஒரு அதிசயம், நாம் இங்கு இருப்பதை காண்கிறோம். ஆனால் நம்முடைய செயல்பாட்டின் மூலம் நமக்கு இந்த வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை நான் முன்பே உணர்ந்தேன். எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆற்றல், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையைப் பெற்றிருந்தோம், பின்னர் தானாக அந்த அதிசயம் நமக்கு நிகழ்ந்தது.

இது நமக்கு எளிதாக கிடைக்கவில்லை. டச்சுக்காரர்கள் இல்லையென்றால், இங்கே நாம் இல்லை. ஆனால் நாம் இங்கே இருக்கிறோம், இது நமக்கு கிடைத்திருக்கும் பலம். ஏனென்றால் யாரும் நம்மை அரையிறுதியில் பார்க்க விரும்பவில்லை, இது நமக்கு கிடைத்திருக்கும் இன்னொரு வாய்ப்பு” என்று ஐசிசி வெளியிட்ட வீடியோவில் ஹைடன் பேசியிருந்தார்.

image

மேலும் “மற்றவர்கள் நம்மை வெளியேற்றிவிட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போது நாம் இங்கே இருக்கிறோம், நம்மை அரையிறுதிக்குள் இணைத்துள்ளோம், கடந்த உலகக்கோப்பையை விட இந்த உலகக்கோப்பையில் நாம் எப்படி உள்ளே வந்திருக்கிறோம் என்பதை நான் விரும்புகிறேன். இனி நம்மை யாரும் வெளியேற்ற முடியாது” என்று பேசியிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.