பூமியில் இருப்பதைவிடவும் பல மடங்கு தங்கம் கொட்டிக் கிடக்கும் விண்கல்லை ஆய்வு செய்ய நாசா முடிவு செய்திருக்கிறது. 16 சைக்கி (Psyche) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் தற்போது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கிடையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 226 கி.மீ அகலமுள்ள இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல் மற்றும் தங்கம் போன்ற உலோகங்கள் இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பு சுமார் $10,000 குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பூமியின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை விடவும் பல மடங்காகும்.

image
சைக்கி ஆய்வு திட்டமானது நாசாவின் குறைந்த செலவிலான ரோபோட்டிக் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஒன்றாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த விண்கலம் மூலமாக அங்கிருக்கும் தங்கம் எதையும் நாசா எடுத்துவரப்போவதில்லை. பெரும்பாலான விண்கற்களின் மேற்பரப்பில் பனிக்கட்டியும் கடினமான பாரை போன்ற அமைப்பையுமே கொண்டிருக்கும் ஆனால் சைக்கி-யில் உலோக மையம் இருக்கும் எனக் கருதப்படுவதால் இந்த விண்கல்லை ஆய்வு செய்வதன் மூலமாகப் பூமியின் மையைப்பகுதியைப் பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்த விண்கலத்தில் இருக்கும் மேக்னெட்டோமீட்டர் விண்கல்லின் காந்தப்புலத்தை ஆராயும். ஸ்பெக்ட் ரோமீட்டர்கள் விண்கல்லின் மேற்பரப்பிலிருந்து வெளிப்படும் நியூட்ரான்களையும், காமா கதிர்களையும் ஆராயும். இது மட்டுமில்லாமல் விண்கல்லின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

image

 சைக்கி விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்டு  2026-ம் ஆண்டு விண்கல்லைச் சென்றடையும்படி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மென்பொருளில் ஏற்பட்ட சிக்கலாலும் திட்டத்தை மேலும் மேம்படுத்த வேண்டியிருந்ததாலும் திட்டமிட்டபடி விண்கலத்தை ஏவ முடியவில்லை. அதனால் வரும் 2023-ம் ஆண்டில் சரியான நேரத்தில் விண்கலத்தை ஏவ நாசா திட்டமிட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.