உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களுக்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் புது முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 30 சதவிகித நிலத்தை வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஒதுக்குவதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் டான்யா பிலிபெர்செக் (TANYA PLIBERSEK) தெரிவித்துள்ளார்.

Australia to set aside at least 30% of its landmass to protect endangered  species - News | Khaleej Times

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத்தீயில் பல ஏக்கர் கணக்கிலான காடுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தன. மற்ற கண்டங்களை விட அதிகமான பாலூட்டி இனங்களை ஆஸ்திரேலியா கண்டம் இழந்துவிட்டதாக இந்தாண்டு ஜூலை மாதம் வெளியான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

Australia to set aside at least 30% of its land mass to protect endangered  species | The Mighty 790 KFGO | KFGO

110 இனங்கள் மற்றும் 20 பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்பாக பல்லுயிர் பாதுகாப்பிற்காக நிர்வகிக்கப்படும் பரப்பு 50 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 10 ஆண்டுத் திட்டமாக அறிமுகமாகும் இம்முயற்சி 2027 ஆண்டு மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Australia to set aside 30% of land mass to protect endangered species |  Cyprus Mail

பூர்விக தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க உதவுவதற்காக 146 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. அதாவது இந்திய மதிப்பில் 1200 கோடி ரூபாயை பல்லுயிர் பாதுகாப்பிற்காக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பாலூட்டிகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.