தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் 2022 – 2023 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமானவரி இணையதளத்தில் பல தொழில்நுட்ப கோளாறுகள் எழுந்ததன் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க பட்டயக் கணக்காளர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம்.

image

வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள் தங்கள் கணக்கினை  பட்டயக் கணக்காளர்கள் (Chartered Accountant) மூலம் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை அறிக்கையை காலக்கெடுவுக்குள் சமர்பிக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘தமிழ்நாட்டிற்கு வட்டியில்லா கடனாக ரூ.3,500 கோடி’- அமைச்சர் பிடிஆர் தகவல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.