பதின்ம வயதை அடைந்தவுடனே உடலில் எந்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்படுமோ அதே அளவிற்கு எண்ணங்கள், செயல்களிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக அதுவரை ரகசியங்கள் என கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் அவை என்ன என்று தெரிந்துகொள்ள தோன்றும். அதில் உடலுறவும் ஒன்று. அதுபற்றி தெரிந்துகொள்ள டீனேஜர்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளாட்ஃபார்ம் தான் porn வீடியோக்கள். பதின்பருவத்தில் தொடங்கி திருமணமானாலும் கூட சிலர் porn வீடியோக்கள் பார்ப்பதை நிறுத்துவதில்லை. திருமணமானபின் porn வீடியோக்களை பார்ப்பது சரியா? அது கணவன் – மனைவியிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்குகிறார் உளவியலாளர் Dr. சுஜிதா.

image

நமக்கு தெரியாததை தெரிந்துகொள்ளத்தான் கல்விமுறைகள், வீடியோக்கள், விளக்கங்கள் போன்றவை உள்ளன. எந்தமாதிரி உடலுறவு கொள்வது, positions, இதிலுள்ள விதங்கள் என்னென்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள porn வீடியோக்களை பார்ப்பதில் தவறில்லை. அதிலும் தம்பதியர் இருவரும் இணைந்து பார்க்கும்போது அவர்களுக்கும் உடலுறவு கொள்ள தூண்டப்படுவதோடு, சில யோசனைகளும் கிடைக்கும். ஆனால், வீடியோ என்றாலே எடிட்டிங் இல்லாமல் இருக்காது. அதிலும் வீடியோக்களில் காட்டப்படும்போது அதில் நடிப்பவர்கள் கொடுக்கும் முகப்பாவனைகள், வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் போன்றவை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அது ஒருவித எதிர்பார்ப்பை தூண்டும். அந்த எதிர்பார்ப்பு நிஜத்தில் கிடைக்காதபோது அந்த உடலுறவு முழுமையடையாததாக தோன்றும். வீடியோக்களைப் போன்று மனைவி தனது கணவனிடமோ அல்லது கணவன் தனது மனைவியிடமோ எதிர்பார்ப்பது தவறு.

image

பொதுவாக கணவன் – மனைவி உடலுறவு கொள்ளும்போது ஒருவித மனநிறைவு கிடைக்கும். ஆனால் வீடியோ பார்த்துவிட்டு பண்ணும்போது அதில் வருவதைப்போன்ற உச்சகட்ட நிலையை அடையமுடியவில்லை என்றால் இணையரில் யாரேனும் ஒருவருக்காவது அது ஒருவித மன அழுத்தத்தை உண்டுபண்ணும். ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வீடியோக்களை பார்ப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதையே நிஜத்திலும் எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனமே.

image

மேலும் porn வீடியோக்களை பார்க்கும்போது norepinephrine என்ற ஹார்மோன் சுரக்கிறது. பொதுவாக இந்த ஹார்மோன்கள் எச்சரிக்கை மற்றும் கவனத்தை தூண்டும். அதாவது நமக்கு எப்போது இதுமாதிரி இன்பம் கிடைக்கும்? நான் எப்போது இந்த இன்பத்தை அனுபவிக்கப்போகிறேன் என்ற ஆர்வத்தை அதிகரித்துவிடும். இதனுடன் ஆக்சிடாசின் (oxytocin) மற்றும் வேசோப்ரசின் (vasopressin) ஹார்மோன்களும் சுரக்கிறது. இது ஞாபக சக்தி செல்களை தூண்டுகிறது. அதனால் வீடியோவில் என்ன பார்த்தார்களோ அதுவே நிஜத்திலும் நடக்கவேண்டும் என்று நினைப்பதுடன், தாங்கள் உடலுறவில் ஈடுபடும்போது அந்த வீடியோக்கள் ஞாபகத்திற்கு வந்துவந்து போவதால் அதையே தனது இணையுடன் செய்துபார்க்கவேண்டும் என்றும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

image

இதுதவிர என்டோர்பின்ஸ் (endorphins) என்ற ரசாயன மாற்றம் ஏற்பட்டு எதிர்பார்ப்பை தூண்டி அதிகரித்துவிட்டுவிடும். இதுபோன்ற பல ஹார்மோன்களின் வேலையால் வீடியோவில் பார்த்தது நிஜத்தில் கிடைக்காதபோது அந்த நபருக்கு ஒருவித கவலையும், மன அழுத்தமும் உருவாவதுடன் தனது இணையிடம் குறைகாணவும் தொடங்குகின்றனர். எனவே முடிந்தவரை இதுபோன்ற வீடியோக்களை தவிர்க்கலாம். அப்படி பார்த்தாலும் எதிர்பார்ப்பில் கவனத்துடன் இருப்பது அவசியம்.

#பேசாதபேச்செல்லாம் முந்தைய தொடர்கள்

6: உடலுறவு மனநிம்மதியை தரும் என்கிறார்களே… அது எந்த அளவுக்கு உண்மை?

5: டீனேஜில் மேலோங்கும் பாலியல் உணர்வு – பெற்றோர்கள் கையாள்வது எப்படி?

4: வயதானவர்களின் காதல் வாழ்க்கையில் எழும் சிக்கல்கள்!

3: தாம்பத்திய உறவில் ஆர்வமின்மை ஏற்படுவது ஏன்?

2: குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடும் முடிவு…  வழிகள் என்னென்ன?

1: இணையருடன் காமம் கொள்ள சரியான நேரம் பகலா இரவா?-மருத்துவர் விளக்கம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.