ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஷில்பா ராணி!

Women’s javelin throw: 60.00 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார் ஷில்பா ராணி!

லக்ஷ்யா சென்னிற்கு பதக்கம் உறுதி!

Badminton men’s singles: அரையிறுதியில் 21-10, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் வெற்றி!

Race walk-இல் இன்னொரு பதக்கம்!

Men’s 10000m race walk: சந்தீப் குமார் 10 கிலோமீட்டரை 38.49.21 நிமிடத்தில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்!

ட்ரிபிள் ஜம்ப்பில் இரண்டு பதக்கங்கள்!

Men’s triple jump: எல்டோஸ் பால் தங்கப்பதக்கத்தையும் அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். எல்டோஸ் 17.03 மீ நீளமும் அப்துல்லா 17.02 மீ நீளமும் தாண்டி முதல் இரண்டு பதக்கங்களைத் தட்டிச் சென்றனர். இதுமட்டுமல்லாமல் 16.89 மீ நீளம் தாண்டி நான்காவது இடத்தை பிடித்ததும் இந்திய பிரவீன் சித்ரவேல்தான்!

குத்துச்சண்டையில் இரண்டாவது தங்கப் பதக்கம்!

Boximg – Men’s 48-51 kg: இறுதிப் போட்டியை வென்று தங்கப்பதக்கம் வென்றார் அமீத் பங்கல்!

குத்துச்சண்டையில் முதல் தங்கப்பதக்கம்.

Boxing – Women’s 45-48 kg: நீத்து இறுதி போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்!

காமன்வெல்த்தில் 16 ஆண்டுகளுக்கு பின் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பதக்கம்!

Women’s Hockey: இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான வெண்கலப் பதக்கப் போட்டியில் முழு நேர முடிவில் 1-1 என்று கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். பின்னர் நடந்த பெனால்டி கார்னரில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி!

பி.வி.சிந்துக்கு பதக்கம் உறுதி.

Badminton Women’s singles: பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பிவி சிந்து வெற்றி. 21-19, 21-17 என்ற நேர்செட்களில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின்னை தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்குப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.