‘தி கிரே மேன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதை நடிகர் தனுஷ் உறுதி செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக தயாரித்து கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியானத் திரைப்படம் ‘தி கிரே மேன்’. இந்தப் படத்தை ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கியிருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் சில நிமிடங்களே வந்தாலும் சிறப்புத் தோற்றத்தில் வந்த தனுஷின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது. ஆனாலும் தனுஷின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது. மேலும் படம் வெளியான சில நாட்களிலேயே ‘தி கிரே மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக ரூசோ சகோதரர்கள் அறிவித்தனர். இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறாரா, இல்லையா என்று கேள்வி எழுந்துவந்தநிலையில், தற்போது அந்தப் படத்தில் நடிக்கவுள்ளதை தனது ட்விட்டர் வாயிலாக உறுதிசெய்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

image

அதில், “தி கிரே மேன் உலகம் பெரிதாகிறது. இரண்டாம் பாகம் தயாராகிறது. தனி நரி தயார். நீங்கள்?” இவ்வாறு அவர் தலைப்பிட்டு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து கொண்டாட்டத்தில் உள்ள அவரது ரசிகர்கள் அவரது பதிவைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.